மோட்டார் சைக்கிள் கும்பல் ஏற்கனவே ஒரு ருமேனியரையும் மோரோக்கோக்காரரையும் இதே பகுதியில், பொலிசாரின் தலையீடு இல்லாமல், தாக்கியுள்ளது.
2012ன் முதல் பாதியில் இனவெறித் தாக்குதல்களினால் 500 குடியேறுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தித்தாள் Ta Nea கொடுத்துள்ள தகவல்கள்படி, பல்வேறு அரசு சாரா அமைப்புக்களின் கருத்துக்களின்படி, இது கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த இதேபோன்ற தாக்குதல்களைப் போல் இரு மடங்கு ஆகும்.
பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய முன்னணி என்ற நிறவெறிக் கட்சி முன்னெப்போதையும் விட பலம் பெற்றது. பிரித்தானியாவில் பிரித்தானிய தேசியக் கட்சி என்ற நாசிக் கட்சி மேலும் பலம்பெற்று வருகிறது.
பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியாத அரசுகள் இவ்வாறான நாசித் தாக்குதல்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஊக்குவிக்கின்றன. இன்னும் சில வருடங்களில் ஐரோப்பா முழுவதும் இவ்வாறான தாக்குதல்கள் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.