Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீரில் மேலும் மோசமடைந்த மக்கள் நிலை!

காஷ்மீர் மக்களுக்கு அமைதியைக் கொடுக்கிறோம் என்று  இந்தியாவோடு இணைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 370-வது பிரிவை திடீரென அமல்படுத்தியது பாஜக அரசு. உலகிலேயே அதிக பதட்டம் காணப்படும் பகுதியாகவும் காஷ்மீர் மாறியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய போதும், இந்திய கட்சிகள் அதிர்ச்சியில்  உறைந்து நின்ற போதும் எதுவும் செய்ய இயலவிலல்லை.

காரணம் இது போன்ற காரியத்தை இதுவரை எந்த பிரதமரும் செய்யத் துணிந்ததில்லை. அத்தனை அரசியல் தலைவர்களையும் வீட்டுச் சிறையில் அடைத்து, ராணுவத்தைக் குவித்து காஷ்மீரை கட்டுப்படுத்தி வந்தது பாஜக அரசு.  

கடந்த 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு காஷ்மீரில் நிலமை மோசமடைந்தது. காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு அதில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிக்கு யூனியன் அந்தஸ்தும் வழங்கியது மோடி அரசு. இணைய தளம் முடக்கம், மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தது என இளம் வயதினர் மன ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகினார்கள்.

இந்நிலையில் இப்போது கடந்த ஐந்து நாட்களாக காஷ்மீரில் திவீரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. முன்னர் ராணுவத்தினரை தாக்கிய திவீரவாதிகள் இப்போது அப்பாவி பொது மக்களை குறிவைத்து தாக்கி வருகிறார்கள்.

ஸ்ரீநகரில் உள்ள லால் பசாரில், மதினா செளக் என்ற இடத்தில் விரேந்தர் பஸ்வான் என்ற வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். விரேந்தர் பஸ்வான் பிகாரை சேர்ந்தவர். ஸ்ரீநகரில் ஈத்கா என்னும் இடத்தில் உள்ள அரசுப்பள்ளிக்குள் நுழைந்த திவீரவாதிகள் இந்து ஆசிரியர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர்.

சுடப்பட்ட இருவருமே அந்த பகுதியின் சிறுபான்மை மக்களான சீக்கிய மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

68 வயதான பிரபல மருந்தக உரிமையாளர் மாக்கன் லால் பிந்த்ரு

செவ்வாயன்று 68 வயது மாக்கன் லால் பிந்த்ரூ என்ற முதியவர் சுடப்பட்டார். அவர் ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பார்க் என்ற இடத்தில் பல வருடங்களாக பிரபலமான மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

பிந்த்ரூ காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.பிந்த்ரூ சுடப்பட்ட ஒருசில நிமிடங்களில்தான் பிகாரை சேர்ந்த சாலையோர வியாபாரி பஸ்வானும் சுடப்பட்டார். அதே நேரத்தில் பந்திபோரா என்ற இடத்தில் முகமது ஷஃபி லோனே என்பவர் சுடப்பட்டார்.

பிந்த்ரூ கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீர் பண்டிட் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தினர்.அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மஜித் அகமது கோஜ்ரி மற்றும் முகமது ஷஃபி தர் என்ற இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மோடி அரசு காஷ்மீர் மீது எடுத்த நடவடிக்கைகள் நிலமையை மேலும் மோசமாக்கி உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.

Exit mobile version