தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு முழுமையாக திறந்து விடாததால், பிரதமர் தலைமையிலான நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் காவிரி நதிநீர் ஆணையம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய 4 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர்களின் பதில் கிடைத்ததும் எந்த தேதியில் ஆணையத்தை கூட்டலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மேலும் கர்நாடக அரசு தமிழகத்தற்கு நடப்பாண்டில் 91.75 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் 5.8 டிஎம்சி நீரே வழங்கி உள்ளது என்று மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.