
மரண தண்டனைக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரித்து நாளை ஒரு நாள் ஊடகவியலாளர்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அடையாள உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.
மூவரின் உயிரைக் காக்க தூக்குதண்டனையை ரத்து செய்யகோரி 30.08.2011 அன்று காலை 10 மணிக்கு புதுவை பல்கலை கழகத்தின் இரண்டாம் வாயிலில் போராட்டம் நடத்த மாணவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட பின்னரும், ஜெயலலிதா மரணதண்டனை குறித்து மௌனம் சாதிப்பதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள்ன சீமான் உட்பட்ட தமிழினவாதிகள் போராட்டங்களை அறிவிக்காத நிலையில் இவ்வாறான ஆதரவுப் போராட்டஙகள் முக்கியத்துவம் பெறுகின்றன.