Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காபூல் தாக்குதல் 108 பேர் பலி- அமெரிக்கா எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதற்கான கெடு முடிவடைகிறது.

அமெரிக்கா ராணுவத்தினர் வெளியேறுவதோடு தங்கள் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஆப்கான் மக்களையும்  வெளியேற்றி வருகிறது. இதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்லாமல் பல திவீரவாதக் குழுக்களும் கண்டிக்கின்றன.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்கா. பிரிட்டன் இரு நாடுகளும் மீட்டுள்ளன. இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தின் வெளியில் காத்துக் கிடக்கின்றனர். விமான நிலையத்தின் வெளிப்பகுதியை தலிபான்களும், உட்பகுதியை அமெரிக்க படைகளும் காவல் காத்து வரும் நிலையில்,

நேற்று மாலை விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் அமெரிக்க மீட்புப் படையைச் சேர்ந்த 13 ராணுவ வீரர்கள் உட்பட 108 பேர் சம்பவ இடதிலேயே பலியாகி உள்ளனர். மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த 11 பேரும்  கடற்படை மருத்துவர் ஒருவருமான கொல்லப்பட்டதால் அமெரிக்க ராணுவம் அதிர்ச்சியடைந்துள்ளது. கடந்த பிபரவரி மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க படைகள் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இது.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல்தான் என்ற  போதும் இது அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா வெளியேறும் மக்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்பதும் முக்கியமானது.

தலிபான்களுடன் அமெரிக்க செய்து கொண்ட ஒப்பந்தங்களின்  அடிப்படையில்தான் இந்த மீட்பு நடவடிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு  ஐ.எஸ்.ஐ.எஸ் கே என்ற பயங்கரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனதுருக்கியும் தன் படைகளை விலக்கிக் கொண்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தின் வெளியில் பிரிட்டன், அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பிற்கு அமெரிக்க அதிபர் தன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.அவர் இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று அறிவித்துள்ளார்.

Exit mobile version