Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காந்தியின் தமிழ்ப் பற்று!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

காந்தியடிகள் தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்காவில் வைத்து தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தென் ஆப்ரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற தமிழர்கள் தொடர்பாக அவருக்கு ஆச்சரியமும் நல்லெண்ணமும் இருந்தது. “இந்திய மக்களிலேயே தமிழர்கள்தான் இந்த போராட்டங்களில் அதிக அளவு கலந்து கொள்கிறார்கள்.

அவர்கள் விருந்திற்குச் செல்வது போல போராட்டங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும்,கடின உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வருங்கால தலைமுறை இவர்களை விட மிகச்சிறந்த முறையில் முன்னேற்றம் காணுவார்கள்” என்பது போல இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதுகிறார்.

1909-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் ஒருவர் காந்திக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்கு ஏற்பாடு செய்கிறார். தென் ஆப்ரிக்க பள்ளிகளிலும் தமிழ் கல்விக்கு ஏற்பாடு செய்கிறார். பின்னர் தமிழ் கற்கத் துவங்குகிறார் தனது வழக்கறிஞர்கள் பணி, சமூக வாழ்வு இவைகளுக்கு மத்தியில் அவர் தமிழ் கற்கிறார்.

இந்தியா வந்த பிறகு தமிழ்நாட்டின் நடேசன், சுந்தரம் போன்றோரிடம் தமிழ் கற்கும் காந்தி ரஜாஜியிடம் தபால் மூலம் தமிழ் கற்கிறார். ஆனால், தமிழர்களுக்கு ஆங்கில மோகம் இருப்பதாக கருதுகிறார் காந்தி. தெலுங்கர்கள் தாய் மொழி மீது பற்றோடு இருக்கும் போது தமிழர்களுக்கு தாய் மொழி பற்று இல்லை ஆங்கிலப்பற்றோடு இருக்கிறார்கள் என நினைத்து கவலைப்படுகிறார் காந்தி. இந்தியா சுதந்திரம் அடையும் போது பொது என வரும் போது இந்தி பொது மொழி என்று ஏற்கிறார் காந்தி.

 ஆனால், சென்னை மாகாண மக்களும், வங்காள மக்களும் இதை எதிர்பார்கள் என்பதால் இந்திய ஏற்க சில ஏற்பாடுகளைச் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறார் காந்தி அதுவே தென்னிந்தியாவில் இந்தி பிரச்சார சபாக்கள் அதிக அளவில் நிறுவப்பட காரணாமாயிற்று. ஆனால், அதே காலக்கட்டத்தில் பெரியார்,அண்ணா போன்றவர்கள் திராவிட அரசியல் மூலம் தமிழுணர்ச்சியை தமிழ்நாட்டின் இண்டு இடுக்கெல்லாம் பரப்பிக் கொண்டிருந்த காலம். விருப்பத்தின் பேரில் இந்தி என்ற நிலை மாறி இந்தி கட்டாயம் என்ற நிலை வந்த போது இந்தி எதிர்ப்புப் போர் திவிரமடைந்தது.https://www.youtube.com/watch?v=7_-YnzorSGA

இந்திய அரசு இந்தி கட்டாயமில்லை என அறிவித்ததன் மூலம் திராவிட இயக்கம் பெரு வெற்றி பெற்றதோடு தேசிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு விடை கொடுத்தது. காந்தியின் சிந்தனைகள் தமிழகத்தில் எடுபடவில்லை. ஒரு வேளை திராவிட இயக்கம் இம்மண்ணில் தோன்றாமல்  போயிருந்தால் தமிழுக்கு வெளிச்சம் கிடைக்காமல் போயிருக்கும் .

காந்தியின் தமிழ் பற்று உண்மையானது அவர் குஜரத்தி, இந்தி, மொழிகள் மீதும் பற்றோடு இருந்தார். தமிழர்களின் தாய் மொழிப்பற்றை அவர் அறியாதவராகவும் இருந்தார்.

Exit mobile version