மேலும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் குறித்த மாணவர்கள் உயிரிழக்கவில்லை என்றும் அவர்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் படையினரால் விடுவிக்கப் பட்டமைக்கான சான்றுகள் எவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்திற்குள் 60 பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இன்று நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி சார்பாகவும் போது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னால் இராணுவ தளபதி சார்பாகவும் பிரச்சாரம் செய்யும் தமிழ் அரசியல் தலைவர்கள், தங்களால்தான்……தங்கள் வேண்டுகோலுக்கு இணங்கித்தான் முகாம்களில் உள்ளவர்கள், முன்னால் விடுதலைப்புலிகள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கைகள் விடுபவர்கள் இம்மாணவர்களின் விடிவிற்கு குரல் கொடுத்து ஆவன செய்வார்களா?
இதற்க்கிடையில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் நீதவான் நீதிமன்ற உத்தரவைப்பெற்று, சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரின் முன்னிலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட உள்ளனர் என்றும், படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளாள் பணியகம் தெரிவித்தது.
18 வயதுக்குக் குறைவான சுமார் 100 பேரும் முதற் கட்டத்தின்போது விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும், புனர்வாழ்வு அளிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதென்றும், இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம்கட்டமாக
18 வயதுக்குக் குறைவான சுமார் 100 பேரும் முதற் கட்டத்தின்போது விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும், புனர்வாழ்வு அளிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதென்றும், இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க கூறியுள்ளார் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவதாகவும், இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னால் இராணுவ தளபதி, சரத் பொன்செகராவும் மேலை நாடுகளின் முகவர்கள். அவர்களை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என கலாநிதி விக்ரமாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் விக்ரமபாகு கருணாரத்ன ரத்மலானை – கம்கரு செவன நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். ஏராளமான தமிழ் மக்களைக் கொன்றொழித்த இவர்கள் இருவரும் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.