சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அமைதியாக இருந்தார்.பாஜக அவரை அதிமுகவுடன் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியது.
இது தொடர்பாக பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி “சாக்கடையை அள்ளி எரியும் வீட்டில் எரிய வேண்டியதுதான்” என்றார். அவர் சாக்கடை என்றது சசிகலாவை பின்னர் அதற்கு விளக்கம் எல்லாம் கொடுத்தார். இதற்கிடையில் அதிமுகவுடன் இணைவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் தினகரனுக்கும் சசிகலாவுக்கும் மோதல் எழுந்தது. அதாவது சசிகலா அதிமுகவுக்கு எதிராக நாம் செயல்படக்கூடாது என்று சொல்ல தினகரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனால் அவர்களுக்குள் மோதல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் காஞ்சியில் இருக்கும் சங்கரமடத்திற்குச் சென்ற சசிகலாவுக்கு அங்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. காஞ்சி ஜெயேந்திரரிடம் அவர் பேசினார். இதை பாஜகவினர் சசிகலா பாஜவை ஆதரித்து விட்டதாக பரப்பி வருகிறார்கள். ஆனால் அவர் இது பற்றி எதுவும் பேசவில்லை. தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையில் உருவாகியுள்ள மோதலில் சசிகலா பாஜக பக்கம் சாய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.