Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஞ்சிவரம் -இடது சாரிகளுக்கு எதிரான கருத்துக்கள்:ரதன்

kanpa1

சுப்பிரபாரதிமணியனின் கதையை திருடிய , காஞ்சிவரத்துக்கு இவ் வருடம்சிறந்த பட விருது கொடுக்கப்பட்டுள்ளது. இடது சாரிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட இப்படத்தில் அதீதமாக நடித்தமைக்காக பிரகாஸ்ராசுவிற்கு சிறந்த நடிகர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

1954ல் முதன் முதலாக இவ் விருது கொடுக்கப்பட்டது. இது வரை இரண்டு தமிழ் படங்களே இவ் விருதைப் பெற்றுக் கொண்டன. ஒன்று காஞ்சிவரம், மற்றையது 1991ல் மறுபக்கம் படத்துக்கு இவ் விருது கிடைத்தது.

 தமிழ் நாட்டிற்கு அண்மையில் உள்ள மலையாளம் 9 விருதுகளையும்( புலிஞன்மம் (2007- இ-பிரியநந்தன்), சாந்தம் (2001- இ- ஜெயராஜ்), வானப்பிரஸ்தம் (2000 – இ-சாஜி.என்.கருண்), கதாபுருஷன் (1996-இ-அடூர் கோபாலகிருஷ்னன்), பிறவி (1989 -இ- சாஜி.என்.கருண்), சிதம்பரம் (1986 – இ- அரவிந்தன்), நிhமால்யம் (1974-இ- வாசுதேவன் நாயர்), சுயம்வரம் (1973-இ-அடூர் கோபாலகிருஷ்னன்), செம்மீன் (1966-இ- ராமு காரியத்)) வங்காளம் 21 விருதுகளையும் பெற்றுக் கொண்டன.

பின்வரும் படங்கள் சத்யஜித்ரே இயக்கி விருதைப் பெற்ற படங்கள்
1992 Agantuk
1972 Seemabaddha
1969 Goopy Gyne Bagha Byne
1965 Charulata
1960 Apur Sansar
1956 Pather Panchali
மிருணாள் சென் இயக்கிய நான்கு படங்களும், கன்னட இயக்குனர் கிருஷ் கர்ணவாளியின் நான்கு படங்களும், வங்காள இயக்குனர் புத்த தேவ் தாஸ் குப்தாவின் ஜந்து படங்களும் விருதைப் பெற்றுக் கொண்டன.

 பிரபல சமூக அரசியல் இயக்குனர் சியாம் பெனகலின் சமர் என்ற படம் மாத்திரமே இவ் விருதைப் பெற்றுக் கொண்டது. தமிழைப் போல் திரைப்பட மொழியை நாசப்படுத்தும் தெலுங்குப் படங்களுக்கு இதுவரை எந்த விருதும் கிடைக்கவில்லை.

சிறந்த இயக்குனர் வ்விருதைப் பெற்றுக் கொண்டனர் இரு தமிழர்கள். 1997ல் அகத்தியன் – காதல் கோட்டைப் படத்துக்காகவும், 2002ல் பி.லெனின் ஆளுக்கு நூறு பேர் என்ற படத்துக்காகவும் பெற்றுக் கொணடனர். அடூருக்கு ஜந்து தடவைகளும், சத்யஜித்ரேக்கு ஆறு தடவைகளும், மிருணாள் சென்னுக்கு நான்கு தடவைகளும் இவ் விருது கிடைத்தது.

சிறந்த நடிகர் விருதை கமலஹாசன் மூன்று தடவைகளும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரிக்சாக்கரன் படத்துக்காகவும், மற்றும் விக்ரம், பிரகாஷ்ராஜ் போன்றோர் தமிழுக்காக பெற்றுக் கொடுத்தனர். பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி(3) மற்றும் ஓம்  பூரி. நஷரூதின் ஷா இரு தடவைகள் பெற்றுள்ளனர். அமிதாப்பிற்கும் இரு தடவைகள் இவ் விருது கிடைத்துள்ளது. சிவாஜி கணேசனுக்கு இவ் விருது ஒரு தடவையேனும் கிடைக்க வில்லை.

இவ் வருடம் பரதேசியில் நடித்தமைக்காக மோகன்லால் இறுதி சுற்று வரை பிரகாஸ்ராசுவுடன் கடும் போட்டியில் போட்டியிட்டு நடுவர்களின் நாயகனின் வாக்கு ராசுவுக்கு சாதகமாக ராசு பரிசைத் தட்டிச் சென்றார். பரதேசி படத்தைப் பார்த்தவர்கள் நடிப்பின் வித்தியாசத்தை அறிவார்கள். சிறந்த நடிகைக்கான விருதை தமிழுக்கு பிரியாமணி, ஷோபா, லக்சுமி, அர்ச்சனா, சுகாசினி ஆகியோர் பெற்றுக் கொடுத்தனர். சப்னா ஆஷ்மிக்கு ஜந்து தடவைகள் இவ் விருது கிடைத்தது. சாரதா மூன்று தடவைகள் பெற்றுக் கொண்டார்.

தேவர் மகனுக்காக சிவாஜி நடுவர் விருதைப் பெற்றுக் கொண்டார். பாவமன்னிப்பு படம் 1962ல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. மக்கள் அபிமான விருதை ஓட்டோகிராப், வானத்தைப் போல, சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்கள் தமிழுக்கு பெற்றுக் கொடுத்தன. குடும்பல நல விருதை தவமாய் தவமிருந்து, கருத்தம்மா, சந்தியாராகம் ஆகிய தமிழ்ப்படங்கள் பெற்றன.

 பல தொழில்நுட்ப விருதுகள் தமிழ்ப்படங்களுக்கு கிடைத்தன. இசை,ஒளிப்பதிவு, கலை போன்றவை. கந்தன் கருணை படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கே.வி.மகாதேவனுக்கு கிடைத்தது. சாந்தி நிலையம் பட ஒளிப்பதிவாளராக மார்க்கஸ் பாட்லேய் விருது பெற்றார். சத்யஜித்ரேயும் 1973ல் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார்.

 காஞ்சிவரம் ஊழதெநநஎயசயஅ என்ற ஆங்கில பதம், காஞ்சிபுரம் என்பதன் திரிபாகவே மாறியுள்ளது. காஞ்சிவரம் என்பது ஆங்கிலப் பெயரே. இன்றும் என்றும் காஞ்சிபுரமாகவே இருந்து வருகின்றது. ஏன் இப்படத்துக்கு காஞ்சிவரம் எனப் பெயரீட்டார்கள்? ஆங்பிலேயர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதனாலா? பல்லவர், சோழர், பல்லவர் விஜய நாயக்கர், மொகாலயர் ஆங்கிலேயருக்கு முன்பாக ஆண்டுள்ளார்கள்.

சரித்திர பிரசித்தி பெற்ற மாமல்ல புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பதி போன்ற நகரங்கள் சுற்றிவர உள்ளன. ஒரு காலத்தில் பட்டுபுடவைகளுக்கு பெயர் பெற்ற இடம். இன்றும் அந்த இடத்தை தங்கவைத்துள்ளது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே இங்கு பட்டு புடவைகள் நெய்யும் தொழில் ஆரம்பமாகிவிட்டது. கி.மு 6000 ஆண்டளிவில் சீனாவில் முதலில் பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்று சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் பட்டு நெய்கின்றார்கள். மொத்த சனத்தொகையில் என்பது வீதமானோர் பட்டுத் தொழில் ஈடுபட்டுள்ளார்கள். (நெய்பவர்கள், வியாபாரிகள்) சுமார் 50,000 சிறுவர்கள் இத் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் சராசரி 12 மணித்திலாயங்கள் வேலை செய்கின்றனர். சில சமயங்களில் 16 மணித்திலாயங்களும் வேலை செய்கின்றனர்.

 சுமார் 15,000 விற்கும் சேலையை நெய்யும் குடும்பத்திற்கு கிடைப்பது வெறும் 1,500 ரூபாய்களே. அதனையும் மீறி உலகமயமாதல்  Cars (Hyundai of S. Korea and Ford Motors of the USA) ‘ Phones (Nokia , Motorola ) போன்ற பல நிறுவனங்கள காஞசிபுரத்தில் இப்பொழுது; உள்ளன. இன்று பலர் நெசவைத் தவிர்த்து வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் பட்டு நெய்யும், தொழிலாளர்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இவர்களது உழைப்புக்கும், கலைத்திறனுக்கும் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. வேங்கடம் தனது திருமணத்தில் மனைவிக்கு பட்டு புடவை உடுத்துவேன் எனக் கூறுகின்றான். அது சாத்தியப்படமால் போக தனது மகளின் திருமணத்திற்கு பட்டு புடவை கொடுப்பேன் எனக் கூறுகின்றான். இதற்காக பட்டு நெய்யும் பொழுது நூல்களை வாயினுள் போட்டு கொண்டு வந்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் நெய்கின்றார்.

இதற்கிடையில் அங்கு வரும் கம்யூனிஸ்ட்லால் தொழிலாளர்களிடையே மாற்றம் ஏற்படுகின்றது. போராடுகின்றனர், வேலை நிறுத்தம் செய்கின்றனர். வேங்கடத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றாள். வேங்கடத்தின் நண்பனின்  மகனுக்கும், வேங்கடத்தின் மகளுக்கும் காதல் மலர்கின்றது.

 நண்பனின் மகன் இராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வருகின்றார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தீhமானிக்கின்றனர். பட்டு புடவையை நெய்யும் முயற்சியில் தீவிரமாகின்றார் வேங்கடம். நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. இதனால் நண்பர்களிடையே ஏற்படும் கைகலப்பில் வேங்கடத்தின் வாய்க்குள் இருந்து நூல்கள் வெளியேறுகின்றன. வேங்கடத்தை கள்ளன் எனக் கூறி அடித்து, சிறையில் தள்ளுகின்றனர். வேங்கடத்தின் மகளின் திருமணம் தடைப்படுகின்றது.

பல வருடங்களின் பின்னர் மகள் வாத நோய் ஏற்பட்டு படுக்கையில் இருக்கும் பொழுது, இரு நாட்கள் பரோலில் வருகின்றார். இரு நாட்களில் திரும்பிச் செல்லவேண்டும். மகளைப் பார்ப்பதற்கு, வேங்கடத்தின் சகோதரி கூட மறுத்துவிடுகின்றார். சகோதரியின் கணவன் தீவிரமாக மறுக்கின்றான். எதுவும் செய்ய முடியாத வேங்கடம், எலி மருந்து கொடுத்து மகளை கொல்லுகின்றார்.

மக்களுக்காக வாழும் இடது சாரிகள் மக்களை கொல்கின்றார்கள் என்ற பிரியதர்சனின் மசாலா சிந்தனை இங்கே வெளிப்படுகின்றது. தொழிலாளர்களிடையே சாதாரண மனிதாபமானம் கூட இல்லை என அடித்துக் கூறுகின்றார் பிரியதர்சன்   முதலாளி வேங்கடத்தை அடிக்கும் பொழுது தொழிலாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி இதனை வெளிப்படுத்துகின்றது.

 படத்தின் முடிவில் இன்று இயங்கும் நெசவாளர்கள் சங்கம் பற்றிய விடயங்களை கூறியுள்ளனர். இப் படம் இடது சாரிகளுக்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்துள்ளது. வேங்கடத்தை ஓர் சபலம் நிறைந்த இடதுசாரியாக காட்டியுள்ளனர். வேங்கடம் கள்ளன் என அடிபடும் பொழுது, வேங்கடத்தின் நண்பரும், இடதுசாரியுமான இவரது நண்பரும், தோழர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் கையைக் கட்டி பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். வேங்கடத்தின் நண்பர் இடது சாரியாகவிருந்தும், வேங்கடம் செய்த தவறுக்காக அவரது மகளின் திருமணத்தையே தடைசெய்கின்றார்.

இறுதியாக வேங்கடத்தின் மகளை, வேங்கடமே கொலை செய்வதுடன்,(கருணைக் கொலை) இயக்குனர் தனது இடது சாரிகள் மேல் உள்ள கோபத்தை தீர்த்துக் கொள்கின்றார். கதையை நகர்த்த தந்தை மகள் பாசக்கோடு. புடத்தின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான பட்டுச் சேலையின் நிறத்தை அடிக்கடி மாத்திக் காட்டுகின்றார்கள்.

இயக்குனர் பிரியதர்சன் சில தமிழ் படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் ஏராளமன படங்களை இயக்கியுள்ளார். வெற்றிகரமான வணிக இயக்குனர். இவரது முதலாவது சீரிய படம். காட்சியமைப்புக்கள் இவரை சிறந்த வணிக இயக்குனர் என்பதை நிரூபிக்கின்றன. கடும் மழையில் பேரூந்தில் வேங்கடம் பொலிஸ்காரர்களுடன் பயனிக்கின்றார். இயல்பாக மழை நாள் போல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படம் காஞ்சிவரத்தை சுற்றியுள்ள பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண புகையிலை போன்ற பல நுணுக்கமான விடயங்கள் பதிவு செய்துள்ளார் இயக்குனர். சுதந்திரத்துக்கு முற்பட்ட காலப்பகுதியை சிறப்பாக பதிவு செய்துள்ளார். வணிக இயக்குனர்கள் தொழில் நுட்பத்தில் சோடை போவதில்லை. கலை சாபு சிரிலும, இசையமைப்பாளர் எம். ஜி. சிறி குமாரும் மிகவும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். வேங்கடமாக பிரகாஸ்ராஜ் நடித்துள்ளார். இவரது தேர்வு தவறானது. வேங்கடம் பாத்திரத்துடன் இவரால் இணைய முடியவில்லை. இயல்பான நடிப்பு வெளிப்படவில்லை. இவரது தோற்றத்தில் ஓர் நெசவாளியையும் காணமுடியாது. முதலாளி போன்ற தோற்றம் கொண்ட பிராகாசுராசுரவை ஏன் இப் பாத்திரத்துக்கு தேர்வு செய்தார்கள். இவரது நடை, உடை, பாவனை அனைத்தும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடே.  துணைப் பாத்திரங்களின் நடிப்பு இயல்பாகவிருந்தது. இதனை பிரதான பாத்திரங்களில் காணமுடியவில்லை. வணிக நடிகர்களை சீரிய படங்களில் நடிக்க வைப்பதும் ஓர் வணிக முயற்சியே.
இக் கதையின் மூலத்தை இயக்குனர் வெளிப்படுத்தவில்லை.

9/24/2008 19:22:48 P.M

Exit mobile version