இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக வடக்குத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றது இந்திய அரசு. இன்று விக்னேஸ்வரனின் கட்சி இந்திய அரசு சொல்வதை மட்டுமே செய்வோம் என்று நேரடியாகவும் மறை முகமாகவும் சொல்லிவருகிறது.
விக்னேஸ்வரனைத் விமர்சிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. புலம்பெயர் புலி சார் அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் பின்புலத்திலேயே காசியானந்தன் விக்னேஸ்வரனை வாயை மூடக் கோரியிருக்கின்றார்.
இதே காசியானந்தன் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களின் முன்பதாக ‘நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?’ என்று தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
அடிப்படையில் விக்னேஸ்வரனுக்கும் காசியாந்தனுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
இங்கு விக்னேஸ்வரனின் இந்திய அடிமைத் தனத்தை அம்பலப்படுத்துவதில் ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய அரசு தனது அடிவருடிகளை களத்தில் இறக்கியுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
விக்னேஸ்வரனுக்கு எதிரான குரல்களைக் கூட் தன்னால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அடியாட்களின் ஊடாகவே மேற்கொள்ளும் இந்திய அரசின் நீண்டகால உக்திகளில் இதுவும் ஒன்று.
இங்கு காசியானந்தானா விக்னேஸ்வரனா என்பதல்ல கேள்வி இருவருமே ஒரே நோக்கத்திற்காக மோதிக்கொள்கிறார்கள் என்பதே பதில்.