Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்ஹையா குமார்!

இந்தியா அறிந்த முற்போக்கு போராளியும், தலித் இளம் தலைவருமான கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி இருவரும் காங்கிரஸ் கட்சியில் நாளை இணைகிறார்கள். இது மிக முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

கன்ஹையா குமார்

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயக அமைப்புகள் மீது கடுந்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு ஆய்வு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதால் போராட்டத்தை தொடங்கினார் ரோகித் வெமுலா. சாதிய பாகுப்பாடினால் அவருக்கான நியாயம் கிடைக்கவில்லை. நியாயம் கிடைக்காததினால் மனம் உடைந்து பல்கலைக்கழக வளாகத்திலேயே தற்கொலை செய்துக் கொண்டார் ரோகித் வெமுலா இது இந்தியா முழுக்க பரவலாக தலித் மக்களை உணர்ச்சிகரமாக உசுப்ப அதிலிருந்து உருவானவர்தான் கன்ஹையா குமார்.

ஒரு பக்கம் மோடி அரசின் ஒடுக்குமுறை பல்கலைக்கழகங்களுக்குள்ளும் பரவ போராட்டங்கள் திவீரமடைந்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த கன்ஹையா குமார் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் பெரும் வீச்சில் பிரச்சாரம் செய்தார். அதனால் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் செல்வாக்கான நபராக வளர்ந்தார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போதும் தோல்வியடைந்தாலும் கணிசமான செல்வாக்கு  அவருக்கு இன்றும் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி அவர் ஜிகேன் மேவானியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

ஜிக்னேஷ் மேவானி

ரோகித் வெமுலாவின் தற்கொகை மாட்டிறைச்சி கொலைகள்  தொடர அதற்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்தார் ஜிக்னேஷ் மேவானி. டெல்லி முதல் உனா வரை ஜிக்னேஷ் மேவானி மிகப்பெரிய போராட்ட யாத்திரையை நடத்தினார். இவரது போராட்டம் கொடுத்த உந்துதலால் தலித் மக்கள் ஆங்காங்கே இறந்த மாட்டிறைச்சியை நெடுஞ்சாலைகளில் வீசினார்கள். பாஜக தலித்துகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைக்க ஜிக்னேஷ் மேவானியின் போராட்டமும் ஒரு காரணம். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் பனஸ்கந்தா  மாவட்டத்தின் வட்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் மிக எளிதாக ஜிக்னேஷ் மேவானி வென்றார்.

இப்போது குஜராத் , உத்தரபிரதேச தேர்தலை மனதில் வைத்து இருவரையும் காங்கிரஸ்  கட்சியில் இணைக்கிறது. ஏற்கனவே ஹ்ருத்திக் பட்டேன் குஜராத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிலையில் ஜிக்னேஷ் மேவானியின் இணைவு காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.

Exit mobile version