Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்வி பொதுப்பட்டியல் – 8 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் பிடியில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது  தொடர்பாக ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதாவது வெவ்வேறு மொழி, நம்பிக்கை பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட  இந்தியாவில் ஒரே கல்வித்திட்டம் இருக்க முடியாது என்பதை உணர்ந்த மத்திய அரசு கல்வியை தீர்மானிக்கும் உரிமையை மாநிலங்களிடமே விட்டு விட்டது.

ஆனால் மிசா அடக்குமுறைக் காலத்தில் கல்வியை மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டது. ஆனால், அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் கல்வி தொடர்பாக தீர்மானிக்கும் அதிகாரங்களை மாநில அரசே கொண்டிருந்தது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு இருந்த கல்வி மீதான உரிமையை சுத்தமாக துடைத்தழித்து விட்டது. பொறியியல், மருத்துவம் உட்பட பல உயர்கல்விகளுக்கு நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்ததோடு மாநில அரசு உருவாக்கி வைத்திருக்கும் கல்வி கட்டமைப்பை  அவர்களின்  சொந்தமாநில மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிக்கலையும் உருவாக்கி வைத்தது.  இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. இந்த சாதனையை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு சாதித்து விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரியோடு மருத்துவமனைகளும் உள்ளது. இந்த சுகாதாரக்கட்டமைப்பை வட இந்திய மாநிலங்களில் கற்பனையே செய்ய முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் வட இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட மாணவர்களே படிக்கிறார்கள். காரணம் மோடி அரசு

இதற்கெல்லாம் தீர்வாக கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்க்கு மாற்றுவதே தீர்வு என்ற பிரச்சாரம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் அவர்களின் அறம் கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். “8 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version