Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலையை காதலிப்பவர்களின் கடின உழைப்பில் கண்கவர் கலைக் கண்காட்சி மலையக மண்ணில் :சை. கிங்ஸ்லி கோமஸ்

மலையக மண்ணில் வரலாற்றில் முதன் முறையாக யாரும் கண்டிராத மிகப் பிரமாண்டமான கலைக் கண்காட்சி ஒன்றை காணும் பாக்கியம் கிடைத்தது2011.11.12 ஆம் திகதி மலையகத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளாத பாடசாலை ஒன்றில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடை பெறுகின்றது என்று சிலர் கூறியதைக் கேட்டு மாணவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்த்து விட்டு வருவோம் என்னும் எணண்னத்துடன் இன்னும் ஒரு நண்பருடன் அட்டன் நகரில் இருந்து புரப்பட்டு போடைஸ் பாதையினூடாக பல சிரமங்களைத்தாண்டி மன்ராசி சந்திக்கு வந்து பார்த்த போது உயரமான ஒரு மலையின் மீது பாடசாலை ஒன்றில் சில சோடனைகளைக் காணக் கூடியதாய் இருந்தது மாணவர்களும் பொது மக்களும் சாரை சாரையாக சென்று வந்துக் கொண்டிருப்பதனைக் கண்டேன். அந்த நிமிடம் வரை அந்த பாடசாலையின் உள்ளே வியக்கத் தக்க சிற்பக் கலைகள் இருக்கும் என்பதனை நானும கூட நினைத்துப் பார்த்திருக்க வில்லை என்பதே உண்மை.

ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கூட்டம் வரிசையாக நிற்பதனைக் கண்டு இந்த சாதாரண பாடசாலையில் இவ்வளவு மக்கள் கூட்டம் வரிசையில் இருந்து பார்ப்பதற்கு என்ன இருக்கின்றது என்று இதயத்தில் தோன்றிய சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது

மரப்பலகையில் செதுக்கிய மான் புல் மேய்ந்துக் கொண்டிருதது எம்மை வரவேற்பதற்காய் வைக்கப் பட்டிருந்தது நு-கிளைன் லைன் த வி உளிகளின் கலைக் கூடத்தில் இருந்து உதயமாகும் மாணவர்களின் மாபெரும் சித்திரக் கண் காட்சி என்று கைகளால் எழுதப்பட்டு மாட்டப்பட்டிருந்த வரவேற்புப் பதாகை பாடசாலையின் பொருளாதார நிலைமையை பரைசாற்றி நின்றது. காத்திரம் அற்ற செயற்பாடுகளும் பிரயோசனமற்ற விடயங்களும் இன்று பிரமாண்டமான டிஜிட்டல் பதாதைகளைக் கொண்டு மக்களை மயக்கும் காலக் கட்டத்தில் இங்கு எளிமை மிக பெரிய பிரமாண்டத்தினை தனக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரிய டைனசோரஸ் மலையக மாணவர்களிண் கற்றலுக்காகவும் உலகத்தின் பிரசித்திப் பெற்ற ஓவியர்கள் பற்றிய தகவல்கள்- இலங்கையின் சிற்பக் கலைகள் தொடர்பான சந்திரவட்டக் கல் முதல் நடுகற்கள் அனைத்துமே அதன் உண்மையான அளவுத் திட்டங்களுக்கும் வர்ணத்திற்கும் தரத்திற்கும் அமைய செதுக்கப் பட்டிருந்தது போற்றத்தக்க விடயமாகும் இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கும் செங்கோல் அதன் உண்மையான அளவுதிட்டங்களுக்கு அமைய செய்யப்பட்டிருந்ததுவும் வியப்பினைத் தந்தது ஐந்து மாதங்களாய் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கடின உழைப்பின் மூலம் உருவான நடராஜர் சிலையும் அது வைக்கப்பட்டிருந்த பீடமும் பிரமாண்டமாக அமைக்கப் பட்டிருந்தது பல ஓவிய கண்காட்சிகளுக்கு சென்றிருக்கும் எனக்கு இதற்கு முன் பார்த்திராத நேர்த்தியையும் தத்ரூபத்தினையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை கோவில் மசூதி தேவாலயம் ஸ்தூபிகள் பிரமிட்டுகள்கள் கிரேக்க கலை வடிவங்கள் என்று சித்திரப் பாடத்தினை ஆண்டு ஆறு முதல் பல்கலைக் கழகம் வரை பயின்று வரும் மாணவர்களுக்கு பிரயோசனப் படும் படிக்கு நிர்மாணிக்கப் பட்டிருந்தத இவை அணைத்தும் தொடர்பாக மாணவர்கள் மிகத் தெளிவாக விளக்கமளித்துக் கொண்டிருந்தது மற்றும் ஒரு விசேட விடயமாகும்

தேயிலைச் செடிகளின் வேர்களுக்கு உயிரூட்டப்பட்ட அவை ஒவ்வொன்றும் பல உருவங்களாக மனிதனாக பறவைகளாக உழைக்கும் மக்களின் அடையாளமான அரிவாள் சம்மட்டியாகவும் செதுக்கப் பட்டு காட்சிப் படுத்தப் பட்டிருந்தமை மலையக உழைப்பாளர்களின் வியர்வைக்கு நன்றி கூறுவதாக காணப்பட்டது
வுரையப்பட்டிருந்த ஓவியங்கள் அனைத்துமே உழைப்பாளர்களின் ஐக்கியத்தினை உணர்த்துவதாகவே காணப்பட்டன

இந்த கண்காட்சி உண்மையிலேயே கூட்டு உழைப்பின் வெகுமதி என்றே கூற வேண்டும் மிக நேர்த்தியான ஒழுங்கமைப்பு சிறந்த முகாமைத்துவம் கலையை மாத்திரம் அல்ல சமூகத்தை நேசிப்பவர்களின் காதலிப்பவர்களின் ஆத்மார்த்தமான வெளிப்பாடாக அமைந்திருந்தமை குறிப்பிடப் பட்ட விடயமாகும்

புhடசாலையின் அதிபர்கண்காட்சி தொடர்பாக கூறும் போது அரசியல் வாதிகள் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊடக நன்பர்கள் பழைய மாணவர்கள் வர்த்தகர்கள் என பலருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்
ஓவிய பாட ஆசிரியர் காளிமுத்து விக்ன விநாயகத்தின் வழி நடத்தலும் சித்திரத்தின் மேல் அவர் கொண்டுள்ள காதலும் இந்த கண்காட்சிக்கு உயிர் கொடுத’துள்ளது என்றால் மிகையாகாது மற்றும் ஒரு ஓவிய ஆசிரியை திருமதி ரமேஸ் பாபுவின் பங்கெடுப்பும் தொழில் நேர்த்தியும் நிகழ்விற்கு மெருகினைக் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது.பாடசாலையின் அணைத்த ஆசிரியரகளினது;ம் வியர்வையின் வாசம் அந்த நிகழ்விற்கு சக்தியை கொடுத்திருந்தது.
இந்த கண்காட்சியை நடத்த விடாமல் செய்ய பலர் முயற்சித்ததாகவும் தோட்ட பொது மக்கள் கூறி கவலைப் பட்டனர் இதற்கு காரணமானவர்கள் ரசனையற்றவர்கள் என்பது மாத்திரம் அல்ல மலையக சமூகம் வளர்ச்சியடைய கூடாது என்னும் அவர்களின் கொள்கையினை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றி இருப்பதனை காணக்கூடியதாய் உள்ளது.

மொத்தத்தில் பல்கலைக் கழகங்களில் நடத்தப் படும் கண்காட்சிகளுக்கு ஈடாக நடத்தப் பட்ட மேற்படி கண்காட்சி போற்றப் பட வேண்டும் இவர்களுக்க கட்சி பேதம் இல்லாது ஒத்துழைப்பு வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

உழைப்பின் அடையாளமான மேற்படி கண்காட்சியினை மக்களுக்காய் வழங்கிய அனைவருக்கும் மலையக கலைஞர்கள் இலக்கிய வாதிகள் ஊடகவியலாளர்கள் மலையகத்தை நேசிப்பவர்கள் அனைவரினதும் சார்பில் நன்றி கூற வேண்டியது நமது கடமையாகும்.

Exit mobile version