Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நாளை விடுதலை

மாவோயிஸ்டுகளின் பிடியில் கடந்த 11 நாள்களாக இருந்துவரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் புதன்கிழமை -02.05.2012-விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மாவோயிஸ்டுகளின் பிரதிநிதிகளான டாக்டர் பி.டி. சர்மா, பேராசிரியர் ஜி. ஹரிகோபால் ஆகியோர் முதல்வர் ரமண் சிங்கை சந்தித்தனர். அப்போது மாவோயிஸ்டுகளின் கடத்தல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக அவர்களை முதல்வர் பாராட்டினார். அப்போது பதிலளித்த சர்மா, மாவோயிஸ்டுகளிடம் உடன்பாடு பற்றி விளக்கப்பட்டது என்றும்; அடுத்த 48 மணி நேரத்துக்குள் மேனனை பத்திரமாக ஒப்படைப்பதற்கான “நல்லெண்ணத்தின் அடையாளமாக’ அந்த உடன்பாடு உள்ளது என்றும் கூறினார் என பைஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சர்மா, மேனன் விடுவிப்பு தொடர்பாக எந்தத் தகவலையும் நான் இதுவரை மாவோயிஸ்டுகளிடமிருந்து பெறவில்லை. மேனனை அழைத்துச் செல்வதற்கு வனப் பகுதிக்கு வருமாறு மத்தியஸ்தர்கள் எவரும் அழைக்கப்படவுமில்லை என்றார்.

Exit mobile version