தமிழ்ப் பெயர் | வடமொழிப் பெயர் |
செம்பாலைப்பண் | -சங்கராபரணம் |
படுமலைப்பண் | -கரஹரப்பிர்யா |
அரும்பாலைப்பண் | -கல்யாணி |
கோடிம்பாலைப்பண் | -கரிஹாம்போதி |
விளரிப்பாலைபண் | -நடனபைரவி |
செவ்வழிப்பண் | -தோடி |
மேற்செம்பாலைப்பண் | -சுத்ததோடி |
இங்கே பண் என்பது தமிழிசை ராகத்தையே குறிக்கும். இது மட்டுமா?…
தமிழ்ப் பெயர் | வடமொழிப் பெயர் |
பஞ்சமம் | – ஆவகிரி |
சீகாமரம் | – நாதநாமக்கிரியை |
புறநீர்மை | –பூபாளம் |
வியாழக்குறிஞ்சி | – செளராட்டிரம் |
கெளசிகம் | –பைரவி |
செந்துருத்தி | –மத்யமாவதி |
அந்தாளகுறிஞ்சி | –சாமா |
தக்கேடு | –காம்போதி |
கொல்லி | – நவரோஜ் |
மேககுறிஞ்சி | –நீலாம்பரி |
சாதாரி | –பந்துவராளி |
நாட்டுப்புற இசையில் இருந்து தோன்றியனவே தமிழ்ப்பண்களில் இருந்து விருத்தியானதே செவ்வியல் இசை
தமிழில் தோன்றிய பண்கள் இன்று ராகங்கள் எனப்படுகின்றன . செவ்வியல் இசையான தமிழிசையே பார்ப்பனர்கள் “கர்நாடக இசை” என பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடத்தலைப்பட்டனர்.
சாஸ்திரிய சங்கீத இலக்கணம் என்று எதை எதையோ எல்லாம் சாதிக்கத்தலைப்பட்டனர். பண் ‘ என்றால் இன்று சம்பூரணராகம் என்றும் ‘பண்ணியம்’ என்பது இன்று சாடவராகம் என்றும் .’திறம்’ என்பது ஒளடவராகம் என்றும் ‘திறத்திறம்’ என்பது ஸ்வராந்தர ராகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
வட மொழி ஏடுகளில் இருக்கும் பாடல்களுக்கும் அவை பாடப்படும் முறைகளிலும் உள்ள முரண்பாடுகளை விளக்கி ஆப்ரகாம் பண்டிதர் கேட்ட கேள்விகளுக்கு மைசூர் அரண்மனை வீணைபண்டிதர் சேசண்ணா
“அவை நியாயமானவை, ஆனால் எம்மிடம் தான் பதில் இல்லை” என்று ஒத்துக்கொண்டார்.
தமிழிசை என்பது வெறும் வாய்ப்பாட்டு மட்டுமன்று.
தமிழிசைக்குப்பயன்படும் இசைக் கருவிகள் கூட தமிழ் நாட்டுக்கும் , தமிழ்மக்களுக்கும் சொந்தமானவை. குழல்,யாழ், குழவு என்பன இவ் உண்மையாகுச் சான்ராக பழந்தமிழ் நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமல்ல ,வீணை,பிடில்,மிருதங்கம் ,,நாதஸ்வரம், தவில் என்பனவும் தமிழிசைக் கருவிகளே.
நாட்டிய சாத்திர நூலை எழுதிய பரதர் கி.பி.5ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அந்தப் பரதரே” தென்னிந்திய மக்கள் பல விதமான நடனங்களிலும், வாய்ப்பாட்டிலும், வாத்திய சங்கீதத்திலும் த்னித்துவமான கலையார்வம் காட்டுகிறார்கள்.
அவர்களின் கலைகளில் அழகும் ,மதுரமும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன” என்கிறார்.
பண்டைத் தமிழகத்தில் பண் இசைத்த ஆடவரை பாணர்கள் என்றும் பெண்டிரை பாடினி என்றும் அழைத்தனர்.
இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர்கள், யாழ் இசைத்தவர்கள் யாழ்ப்பாணர்கள். இதே போல் நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் எனஅழைக்கப்பட்டனர்.
கர்நாடகைசை வட மொழியில் இருந்து தான் தோன்றியது .அது தமிழ் நாட்டில் தோன்றவில்லை”. என்று வாதிடுபவர்கள் அதன் தொன்மைக்கு வட மொழியில் இருந்து காட்டும் ஆதாரமாக சாரங்க்குதேவர் என்பவர் எழுதிய இசை இலக்கண நூலாகிய “சங்கீதரத்னாகரம்” என்பதே இவர் கி.பி.12 ம் நூற்றாண்டைச்சேர்ந்தவர். கார்ஷ்மீர் தேசத்தைச் சேர்ந்த சொட்டில்தேவர் என்பவரின் மகன்.
பெளலதபாத் என்ற தேவகிரிராஜ்ஜியத்தை ஆண்ட சிம்மண ராஜசபையில் சமஸ்தான வித்துவானாக இருந்தவர் இவர் தமிழ்நாட்டில் நன்றாக வளர்ந்திருந்த த்மிழிசையை நன்கு பயின்ற பின்னரே தமது நூலை எழுதினார். அந்நூலில்(சங்கீதரத்னாகரம்) அவர் இத்தளம் ,காந்தாரபஞ்சமம், கெளசிகம், நட்டராகம், தக்கராகம்,தக்கேசி, நட்டபாடை,செவ்வழி,செஞ்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம்,குறிஞ்சி முதலான தமிழ்ப்பண்களைக் குறிப்பிடுகின்றார்.
சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரத்துக்குப் பதினொரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் தான் சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்றுக்காதை,வேனிற்காதை , ஆச்சியர்குரவை, நடுநற்காதை, ஆகிய நாங்கு காதைகளும் தமிழிசை பற்றிய குறிப்புகளை தெளிவாக விளக்குகின்றன. அத்துடன் யாழாசிரியன்,அமைதி, குழலோன் அமைதி, தண்ணுடையோன் அமைதி, ஆடலாசிரியன் அமைதி என அந்நூல் விவரிக்கும் விளக்கங்கள் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாகவுள்ளன.
சிலப்பதிகாரத்தை அடியொற்றியே சங்கீதரத்னாகரம் எழுதப்பட்டது என்பது தான் வரலாற்றுண்மை.
பார்ப்பணர்கள் வகுத்தவிதிகளின் படி அவர்கள் ஆடலிலோ , பாடலிலோ ஈடுபடக் கூடாது. அப்படி அக்கலைகளில் ஈடுபட்ட பார்ப்பணர்களை அவர்களே விலக்கி வைத்தார்கள் என சிலப்பதிகாரத்தில் கூறப்ப்ட்டுள்ளது. பார்ப்பணசேரிகள் என அவை அழைக்கப்பட்டன.
சிலப்பதிகாரம் மட்டுமல்ல அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற், அடியார்க்கு நல்லார் காலத்திலும் தமிழிசையின் தொன்மைக்கு சான்றாக இன்ன ,இன்ன நூல்கள் இருந்தன என்பதற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளன.
சில சான்றுகள்
1.அகத்தியம்
2 .இசை நுணுக்கம்
3. இந்திரகானியம்
4.குணநூல்
5. கூத்தநூல்
6.சயுந்தம்
7.செயிற்றியம்
8. தாளவகை கோத்து
9. நூல்
10. பஞ்சபாரதீயம்
11. பஞ்சமரபு
12.பரதம்
13. பரதசேனாதீயம்
14.பெருங்குருகு
15.பெருநரரை
16.மதிவாணர் நாடகத்தமிழ்நூல்
17. முறுவல்
அடியார்க்கு நல்லார் தாம் வாழ்ந்த காலத்தில் வழங்கிய இசைச் சொற்களையே தமது நூலுரையிலும் கையாண்டார்.
உதாரணமாக குரல் ,துத்தம் , கைக்கிளை, உழை , இனி, விளரி,தாரம் என்பவை . இவை சுரங்களைக்குறிப்பிட தமிழர்கள் பாவித்த சொற்கள் ஆகும். அதுமட்டும் அல்ல ஒரு ஸ்தாயியை ஒரு இலக்கு என்றும் மண்டிலம் என்றும் த்மிழில் வழங்கினர்.
ச.ரி .க. ம .ப. த.நி என்ற குறியீட்டு எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களே. இன்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதரத்னாகரம் என்ற நூலை சாரங்கதேவர் சமஸ்கிருத பெயர்களை கொடுத்து அவை வடமொழியிலிருந்து வந்தவை போன்ற புரட்டை ஏற்படுத்த உதவினார் .
தமிழ்’ச’வுக்கு வடமொழி ‘ஸ’ வலிந்து திட்டமிடப்பட்டது. இந்தப்புரட்டை மறைத்த நாராயண சாத்திரிகள் கீழ்க்கண்டவாறு வன்மையாகக் கண்டிக்கிறார்.
“சாரங்கதேவர் விபரித்த ‘ச ரி க ம ப த நி’ என்ற ஏழு சுரக்குறிகள் காரணப் பெயருள்ளவை என்பது, இடுகுறிப்பெயர்கள் என்று மெய்ப்பித்து விளக்குகிற சிகண்டி மாமுனிவர் அருளிச் செய்த இசை நூலுக்கும் விரோதப்படுகிறது.
அன்றியும் ஷட்ஜா என்ற பதத்திலிருந்து “ஸ” வும்,
ருஷப என்ற பதத்திலிருந்து “ரி” யும்,
காந்தார என்கிற பதத்திலிருந்து “க” வும்,
மத்திம என்ர பதத்திலிருந்து “ம” வும்,
பஞ்சம என்கிற பதத்திலிருந்து “ப” ,
தைவத என்கிற பதத்திலிருந்து “த” வும் ,
நிசாத என்கிற பதத்திலிருந்து “நி” யும் வந்ததென்று உரைக்கில்” ஸ” என்கிற சமஸ்கிருத அட்சரம் “ஸ” என்கிற மாறுதலை அடைவதற்கும் “,ரு” என்கிற உயிரெழுத்து “ரி” என்று சமஸ்கிருதத்தில் மெய் எழுத்தாக மாறுவதற்கும், “கா” என்கிற நீட்டம் “க” என்று குறைவதற்கும் தைவதம் என்பது “த” என்று அகர வடிவமைந்து யாதொரு சமஸ்கிருத வியாகரண பிரமாணமும் காண முடியாமையாலும் , ஷட்ஜா முதலிய ஏழு பதங்களும் காரணச் சொற்களென்று காட்டுவதற்கு “ரிஷப, காந்தார ,தைவத” என்கிற மூன்று பதங்களின் பொருள் ஆராச்சியில் சுரங்களைச் சம்பந்தித்தவைகளாகவே சாரங்கதேவர் விபரிப்பதால் ஷட்ஜா, மத்திம, பஜ்சம , நிஷத என்கிற உரைகள் சுரங்களையே சம்பந்தித்ததெனக் கூறுவது கிரமமில்லாமையாலும் அபந்தியாயத்தையும் ஷண்ட , ருதம், காத்ரம், மதுரம், பட்டலம், தைரியம் முதலான சமஸ்கிருதப் பதங்களில் முதல் அட்சரமாக அதிப்பிரசிங்கப்பதாலும் திராவிடர்கள் அமைத்த இடுகுறிப்பெயரை மாற்றுவதற்கு எடுத்த புரட்டு என்று தீர்மானிக்கப்படுகிறது”.
இப்படி தமிழிசையை ஒழித்துக்கட்ட வடமொழியாளர்கள் செய்த சதிகள் கொஞ்சமல்ல. இன்றைய கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவாரத்திலிருந்தே தோன்றின .கீர்த்தனையில் நிரவல், விருத்தி முதலிய இசை அமைப்புக்கள் எல்லாம் தேவாரபாடல்களைக் கொண்டே அமைந்தவை.
கர்நாடக இசை , கர்நாடக இசை என்று நாம் இங்கே குறிப்பிடும் இசைக்கும் இன்றைய தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லை, இல்லவேஇல்லை.
கி.பி.10ம் நூற்றாண்டில் மகராட்டிரத்தை ஆண்ட மன்னனான சோமேச புல்லேகமால் என்ற என்பவன் இசைக்கலை மீது தீவிர நாட்டம் கொண்டவனாக விளங்கினான். தென்கோடியில்(தமிழ்நாட்டில்) வழங்கி வந்த இசையை ஒரு குறியீட்டிற்காக கர்நாடக இசை என தவறுதலாக கூறியதன் விளைவே இத் தவறு என்பது வரலாறு. தனது நாட்டுக்கு தெற்கே உள்ள நாட்டு இசை என்பதை சொல்ல கர்நாடகத்தை குறிப்பிட்டு சொன்னதே அது . மலையைக் கல் என்பது தமிழ் வழக்கு , இமயமலையை வடபெருங்கல் என்று தொல்காப்பியம் சொல்கிறது.
(இன்னும்வரும்…)