Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கர்நாடகாவுக்கு எதிராக காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்!

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நேற்று (13.07.2021) – காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாட்டின் காவிரிப்படுகை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

தஞ்சை
தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி,  சா. சரவணமூர்த்தி (மண் மரபு மீட்புக் குழு), சி. குணசேகரன் (தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகம்), காசி இரவிச்சந்திரன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி), விசிறி சாமியார் வி.முருகன் சாமியாடிகள், கா. முத்துக்கிருஷ்ணன் (இந்திய சனநாயகக் கட்சி) உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் பங்கேற்றனர்.

பெண்ணாடம்
கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தி. சின்னமணி, மகளிர் ஆயம் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா, செயற்குழுத் தோழர்கள் க. இந்துமதி, மு. செந்தமிழ்ச்செல்வி, பேரியக்க. துறையூர் கிளைச் செயலாளர் தோழர் சி. பிரகாசு, பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் பி. வேல்முருகன், சப்தகூடல் கிளைச் செயலாளர் தோழர் தே. இளநிலா, காரையூர் கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல், பாசிகுளம் கிளைச் செயலாளர் தோழர் அன்புதுரை, பெலாந்துறை கிளைச் செயலாளர் தோழர் தமிழ்வாணன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். 44 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களை பெண்ணாடம் சரோரத்தின அரங்கில் அடைத்துள்ளனர்.  

குடந்தை
தஞ்சை மாவட்டம் – கும்பகோணத்தில் காந்தி பூங்காவில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்  செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச் சுடர்,  விடுதலைத் தமிழ்ப் புலிகள் துணை பொதுச் செயலாளர் திரு. தளபதி சுரேசு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், வி.த.பு. மாவட்ட செய்தித் தொடர்பாளர் திரு. சாக்கோட்டை ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் அண்ணா சிலை – முதன்மைச்சாலை அருகில், காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் ஐயா கோ. தமிழுலகன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழர் களம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. அழகர், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் தோழர் த. இரமேசு, நா.த.க. பொருளாளர் திரு. ம.செ இளங்கோவன்,   சிந்தனையாளர் பேரவை தலைவர் திரு. கோ. செல்வம், புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் உதயசங்கர், மகளிர் ஆயம் செல்வி, புவனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எடியூரப்பாவின் கொடும்பாவி எரித்து சாம்பலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக் குழுவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

செங்கிப்பட்டி
தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. தென்னவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், த.தே.பே. மாவட்டச் செயற்குழு தோழர் இரெ. கருணாநிதி, க. காமராசு, விவசாயி புதுப்பட்டி ஐயா செல்வம், த.தே.பே. ஒன்றியக்குழு தோழர் ச. செந்தமிழன், செங்கிப்பட்டி கிளைச் செயலாளர் பழ. மலைத்தேவன், ஆனந்த உள்ளிட்ட தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்று எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை ஓவியா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சிதம்பரம்
கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணித் தலைவர் திரு. சி. ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர் பிரபாகரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோர் பங்கேற்று எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் காவிரி உரிமை மீட்புக் குழு திருச்சி அமைப்பாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற எடியூரப்பா கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கேச. இனியன், மகளிர் ஆயம் தோழர் த. வெள்ளம்மாள், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி, வே.பூ. இராமராசு, ஐயா வி. சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். எடியூரப்பா கொடும்பாவியை எரிக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளருமான மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. கலைச்செல்வம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். 15 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இராதாநரசிம்மபுரம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள இராதாநரசிம்மபுரத்தில் ஆற்றுப் பாலம் அருகில் திரு. கோவலன் தலைமையில் எடியூரப்பா கொடும்பாவியை எரித்த 13  பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

வல்லூர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள வல்லூரில் கடை வீதியில் திரு. கண்ணன் – பூபாலன் – ஞானப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் எடியூரப்பா கொடும்பாவியை எரித்த 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சித்தேரி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள சித்தேரியில் காளியம்மன் கோயில் அருகில் திரு. இரமேசு – திரு. சுரேசு ஆகியோர் தலைமையில் எடியூரப்பா கொடும்பாவியை எரித்த 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாக்குறிச்சி
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள கன்னியாக்குறிச்சியில் கடைத்தெருவில் திரு. வீரய்யன் தலைமையில் எடியூரப்பா கொடும்பாவி 20க்கும் மேற்பட்டோர் எரித்துச் சாம்பலாக்கி, கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கமெழுப்பினர்.

வெள்ளாம்பெரம்பூர்
தஞ்சை மாவட்டம் – வெள்ளாம்பெரம்பூரில் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் தோழர் துரை. இரமேசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தென்பெரம்பூர்
தஞ்சை மாவட்டம் – தென்பெரம்பூரில் காவிரி உரிமை மீட்புக் குழு திரு. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். போராட்டத் தோழர்களைக் கைது செய்த காவல்துறையினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அலிசக்குடி
தஞ்சை மாவட்டம் – அலிசக்குடியில் திரு. விசய் – திரு. மணிமாறன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரிக்க முயன்றனர். காவல்துறை எரிக்க அனுமதிக்காமல் தடுத்தனர்.  

ஐம்பதுமேல்நகரம்
தஞ்சை மாவட்டம் – ஐம்பதுமேல்நகரத்தில் திரு. அப்பராசு – திரு. செந்தில்வேலன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் எடியூரப்பா கொடும்பாவியை 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எரித்தனர்.

வரகூர்
தஞ்சை மாவட்டம் – வரகூரில் திரு. அருண்ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எடியூரப்பா கொடும்பாவியை காவல்துறையினர் எரிக்க விடாமல் தடுத்தனர். இதனையடுத்து, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கருப்பூர்
தஞ்சை மாவட்டம் – கருப்பூரில் திரு. வீரராசேந்திரன், கே. சிவக்குமார் உள்ளிட்ட 30க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். 12 பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நடுக்காவிரி
தஞ்சை மாவட்டம் – நடுக்காவிரியில் திரு. உலக செந்தில் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 25க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகத்தி
தஞ்சை மாவட்டம் – நாகத்தியில் திரு. இராஜராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 40க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். 27 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

உமையவள் ஆற்காடு
தஞ்சை மாவட்டம் – உமையவள் ஆற்காட்டில் திரு. துரைராசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு எடியூரப்பா கொடும்பாவியை எரிக்க முயன்றனர். காவல்துறையினர் எரிக்க விடாமல் தடுத்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடம்பன்குடி
தஞ்சை மாவட்டம் – கடம்பன்குடியில் திரு. வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர்.  

மணவெளி
தஞ்சை மாவட்டம் – மணவெளியில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்து கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  

கூடநாணல்
தஞ்சை மாவட்டம் – கூடநாணலில் திரு. பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

குழிமாத்தூர்
தஞ்சை மாவட்டம் – குழிமாத்தூரில் திரு. சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

வடகால்
தஞ்சை மாவட்டம் – வடகால் பகுதியில் திரு. பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, எடியூரப்பா கொடும்பாவியை எரித்தனர். நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பூதலூர்
தஞ்சை மாவட்டம் – பூதலூரில் தமிழக விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் திரு. பா. தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற எடியூரப்பா கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் 12  பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பனந்தாள்
தஞ்சை மாவட்டம் – திருப்பனந்தாளில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தை. சேகர் தலைமையில் நடைபெற்ற எடியூரப்பா உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில், வி.த.பு. திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் திரு. தேவேந்திரன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் திரு. பிரபு உள்ளி்ட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற எடியூரப்பா கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாமணியில் தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது எடியூரப்பா கொடும்பாவியை எரிப்பதற்கு முன்பாகவே, காவல்துறையினர் அடாவடித்தனமாக அதனைப் பிடுங்கிச் சென்றதும், போராட்டத் தோழர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

Exit mobile version