Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கரூர் அருகே தனியார் கல்லூரி வாகனம் மோதி 10ம் வகுப்பு மாணவி பலி : நான்காவது கொலை

கரூர் அருகே உள்ள காந்தி கிராமத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியரின் மகள் பத்மாவதி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம்போல தனது சைக்கிளில் சென்ற அவர் மீது தனியார் தொழில்நுட்ப கல்லூரி பேருந்து ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவி பத்மாவதி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த வாரம் தான் வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் தனியார் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் இறந்தனர். நேற்று சென்னையில் பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது. இதையடுத்து கரூரில் கல்லூரி வாகனத்தில் அடிபட்டு பள்ளி மாணவி பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மக்களுக்கும் பொதுவான கல்வி பணப்பசிக்கு இரையானது மட்டுமன்றி உயிர்ப்பலியும் எடுத்து வருகின்றது.

Exit mobile version