Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கரும்பூஞ்சைக்கும் மருந்தும் இல்லை தடுமாறும் சுகாதாரத்துறை!

A doctor assists a Covid-19 coronavirus patient with Black Fungus, a deadly and rare fungal infection, as he receives treatments at the NSCB hospital in Jabalpur, on May 20, 2021. (Photo by Uma Shankar MISHRA / AFP)

கொரோனாவுக்கு இணையாக பரவுவதாகக் கூறப்படும் கருப்புப் பூஞ்சை என்னும் நோயாலும் சிலர் இறந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான மருந்துகள் கையிறுப்பில் இல்லாததால் தமிழக சுகாதாரத்துறை தடுமாறி வருகிறது.இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக  `மியுகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 22 மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை நோயின் தாக்கம் இருந்தாலும், குஜராத் மாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பு உள்ளது.  நீரழிவு நோய், கேன்சர். ஹெச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில் சில ஆயிரம் பேருக்கு இந்நோய்த்தொற்று இருந்தாலும் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக குஜராத்தில் 2,165 பேரும் மகாராஷ்டிராவில் 1,118 பேரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக 9 லட்சம் ஆம்போடெரிசின்-பி குப்பிகளை இறக்குமதி செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது 50,000 குப்பிகள் வந்து விட்டன. அடுத்த 3 நாள்களில் 3 லட்சம் குப்பிகள் கிடைக்கும் . `கொரோனா நோயாளிகளுக்கு முடிந்த வரையில் ஸ்டிராய்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்”என்று சுகாதாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆம்போடெரிசின்  ஊசிக்கு கடுமையான தடுப்பாடு உருவாகியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்தமருந்துக்கு தடுப்பாடு  உருவாகியுள்ள நிலையில்  சில உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன.

ஆம்போடெரிசின் மருந்தை உற்பத்தி செய்ய தனியாருக்கு டெண்டர் ஒன்றை தமிழக அரசு விட்டிருந்தது.  அந்நிறுவனமோ அந்த டெண்டரில்  இருந்து விலகிக் கொண்டது. காரணம் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் தடுப்பாடு நிலவுகிறது. ஆயிரக்கணக்கான டோஸ்கள் தேவைப்படும் நிலையில் சில நூறு டோஸ்களே உள்ளது.

தமிழகத்திற்கு வரும் வாரத்தில் 15 ஆயிரம் டோஸ் ஆம்போடெரிசின் மருந்து வரவிருக்கிறது. இந்த மருந்தை தேவைக்கு ஏற்றார் போல பயனப்படுத்திக்  கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Exit mobile version