வடமாகாண சபைத் தேர்தலில் நம்பிக்கையற்று அரசியல்ரீதியாக அதனை நிராகரிக்கிறோம் என்ற தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி நேற்று ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறிக்கையை தினக்குரல் மற்றும் வீரகேசரி ஆகிய நாளிதழ்கள் பிரசுரிக்க மறுத்துவிட்டன. அந்த அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அதனிப் பிரசுரிக்க இந்த இரண்டு ஊடகங்களும் நிராகரித்துவிட்டன. கருத்துச் சுந்தந்திரம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைகுள் முடக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த ஊடகங்களும் தம்மால் இயன்ற அளவிற்கு ஜனநாயக மறுப்பை மேற்கொண்டன. இன்று இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் எல்லைக்குள் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு அப்பாலான எந்தக் கருத்தையும் ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை.
சுயாதீனமாகவும் ‘நடுநிலைமையாகவும்’ செயற்படுவதாகக் கூறும் இந்த ஊடகங்களும் காலத்திற்குக் காலம் எஜமானர்களின் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஊடகங்களாக மாறியுள்ளன.