கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சகி கலஹே தெரிவித்துள்ளார்.
இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றிய போதே சகி கலஹே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் தப்பிச் சென்று பதுங்கக்கூடிய பகுதிகளில் கருணாவின் குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய மாநாட்டில் இந்திய இராணுவப் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகணத்தின் தொப்பிகலை மற்றும் மன்னாரின் சிலாவத்துறை பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது சகி கலஹேயும் ஒரு கட்டளை அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.