கருணாநிதி தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கும் கோபாலபுரம் இல்லத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். இச் சந்திப்பு பரம திருப்தியளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கு நன்றி தெவித்துக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். “முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார்.