Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கத்திதிக்கு எதிராகப் போராடியவர்கள் சிறையில்: தமிழக அரசியலிலும் லைக்கா ஆதிக்கம்

kaththisoonலைக்கா நிறுவனத்தின் சினிமாவான கத்தி படத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களான செம்பியன், பிரபா ஆகியோர் நேற்று ‘ஈழத் தாய்’ ஜெயலலிதா அரசின் பொலிஸ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் மக்களின் வரிப்பணத்தை இனக்கொலையாளியும் ஏகாதிபத்திய அடியாளுமான ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா மொபல் நிறுவனம் தென்னிந்திய சினிமாத் துறைக்குள் முதலிட ஆரம்பித்துள்ளது. சினிமா கோமாளிகள் விஜய், சரத்குமார் உடப்ட பலரின் நேரடியான ஆதரவு மட்டுமல்ல ஜெயலலிதா அரசின் ஆதரவும் லைக்காவிற்கு கிடைத்திருக்கிறது.

ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் 95 வீதமான பங்குகளைக் கையகப்படுத்திய லைக்கா ஏழைகளின் நூறு மில்லையன் டோலர்கள் பணத்தை ராஜபக்ச அரசுடன் இணைந்து சூறையாடியது மட்டுமன்றி தமிழ் காட்சி ஊடகங்கள், தொலைத் தொடர்பு, இணைய ஊடகங்கள், புலம் பெயர் இளையோர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள், போன்ற அனைத்தையும் தனது பண பலத்தால் விலைகொடுத்து வாங்கியுள்ளது.

புலம் பெயர் மற்றும் இலங்கை அரசியல் நேரடியாகத் தலையிடும் லைக்கா, தமிழ் நாட்டு அரசியலிலும் ராஜபக்ச சார்ந்து தலையிடுவதற்கான ஆரம்பமே இது என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன. சீமானில் ஆரம்பித்த லைக்காவின் அரசியல் ஜெயலலிதா வரை எட்டியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஈழம் பிடிப்பதாக மக்களை ஏமாற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன லைக்காவின் தலையீடு குறித்து மூச்சுவிடாத நிலை சந்தேகத்திற்குரியதே.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்
இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு
சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora
Exit mobile version