ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதன் 95 வீதமான பங்குகளைக் கையகப்படுத்திய லைக்கா ஏழைகளின் நூறு மில்லையன் டோலர்கள் பணத்தை ராஜபக்ச அரசுடன் இணைந்து சூறையாடியது மட்டுமன்றி தமிழ் காட்சி ஊடகங்கள், தொலைத் தொடர்பு, இணைய ஊடகங்கள், புலம் பெயர் இளையோர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள், போன்ற அனைத்தையும் தனது பண பலத்தால் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
புலம் பெயர் மற்றும் இலங்கை அரசியல் நேரடியாகத் தலையிடும் லைக்கா, தமிழ் நாட்டு அரசியலிலும் ராஜபக்ச சார்ந்து தலையிடுவதற்கான ஆரம்பமே இது என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன. சீமானில் ஆரம்பித்த லைக்காவின் அரசியல் ஜெயலலிதா வரை எட்டியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் ஈழம் பிடிப்பதாக மக்களை ஏமாற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன லைக்காவின் தலையீடு குறித்து மூச்சுவிடாத நிலை சந்தேகத்திற்குரியதே.