முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள்.
பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலம் சரியாகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார் இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர். அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் மருத்துவமனைக்குச் சென்று பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அந்த இடத்தில் இல்லை. சசிகலா வரும் செய்தி கேள்விப்பட்ட அவர் அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்று விட்டார்.
நாளை மறைந்த பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமியின் உடல் போடி மாவட்டத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது.