நடந்து முடிந்த சட்டமன்\ற தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. பலத்த போட்டிக்கு இடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.எதிர்க்கட்சி தேரிவில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்து ஓய்ந்தன.இந்நிலையில் இப்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னரான முதல் சட்டமன்றம் கூட இருக்கிறது. அதனால் சட்டமன்ற துணை எதிர்க்கட்சி தலைவரையும், அதிமுகவுக்கான சட்டமன்ற கொரடாவையும் தெரிவு செய்ய வேண்டும்.
அதிமுக சார்பாக இருவரும் இணைந்தே அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில், இப்போது இருவருமே தனித் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். ஓபிஎஸ் தரப்பினர் சசிகலாவுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. தன்னை எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்ய எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓபிஎஸ்-சசிகலாவுடன் இணைய நினைப்பதாகவும், அதிமுகவை முழுக்க எடப்பாடி பழனிசாமி கைகளுக்குச் செல்வதை தடுக்க இதுதான் தருணம் என்றும் ஓபிஎஸ் நினைக்கிறார்.
மேலும் அதிமுகவில் கொங்குபகுதியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் சாதியினர் கை ஓங்கியிருப்பதை முடிவுக்கு கொண்டு வரா விட்டால் தன்னுடைய எதிர்காலமும், தனது ஆதரவாளர்கள் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் என நினைக்கிறார் ஓபிஎஸ் அதனால் தனது அதிகாரத்தை மீள கட்டமைத்துக் கொள்ள துணை எதிர்க்கட்சி தலைவர் பதவி தனக்கும், சட்டமன்ற கொறடா பதவி தனது ஆதரவளர்களுக்கும் வேண்டும் என நினைக்கும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார்.