குறிப்பாக சீனாவினதும் பொதுவாக ஐரோப்பிய அமரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளதும் அபார வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஐரோப்பிய அரசுகளும் அவற்றின் ஊது குழல் ஊடகங்களும் இந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக சீன வீராங்கனை ஒருவர் அதிகமாக ஊக்க மருந்தைப் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பி.பி.சி ஊடகம் மற்றும் செய்திப்பத்திரிகைகள் பிரச்சாரம் மேற்கொண்டன. சில அமரிக்க ஐரோப்பியப் பயிற்சியாளர்களும் ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்களைப் பரப்பினர். பின்னதாக இவை நிரூபிக்கப்பட முடியாத நிலையில் மௌனமாகிவிட்டனர். நேற்றைய பிரித்தானிய செய்திப் பத்திரிகைகள் வெற்றி பெறும் வீரர்களின் இறுதி வெற்றி குறித்து புதிய அளவுகோல் தேவை என எழுத ஆரம்பித்திருந்தன.