தமிழகத்தில் விளையாட்டுத்துறை பலவீனமான ஒன்று. ஆனால் இந்தியாவிலேயே கேரள விளையாட்டுத்துறை பலமானது. அதனால்தான் மலையாளிகள் தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் ஜொலிப்பார்கள். இன்று விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை துவங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதமாகப் பேசிய அவர் “ விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.அரசியலை விளையாட்டாக எடுத்து கொள்பவர்கள் இந்த நாட்டில் உள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விளையாட்டு போட்டிகளில் அணி ஒற்றுமை மிகவும் முக்கியமானது வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால் வெற்றி சாத்தியம். வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என கூறினார்.