தமிழ்நாடு அரசியலில் மேடை தோறும் பாஜகவும் , நாம் தமிழர் கட்சியும் பேசுகிற பேச்சால் எப்போதுமே இணைய தளங்களில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறவர்கள் போல ஒரு தோற்றம் ஏற்படும்.
மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் வெறும் வாயில் முழம் போட்டே ஓட்டி விடுகிறார்கள். பாஜக 9 மாவட்ட தேர்தல்களில் 20% இடங்களை அதிமுகவிடம் கேட்டு வாங்கியது. ஆனால் பாஜக பெரும்பலான இடங்களில் தோல்வியடைந்துள்ளது. கோவை குருடம் பாளையம் 9-வது வார்ட் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு பெற்றுள்ளார். அவரது குடும்பத்தில் ஐந்து வாக்குகள் உள்ள போதும் அவரது குடும்பத்தினரே அவருக்கு வாக்களிக்கவில்லை.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. சரி, மேடையில் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் நாம் தமிழர் கட்சி கவலைக்கிடமாக உள்ளது. ஒரு ஒன்றியக் கவுன்சிலர் பதவி கூட நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை. மேலும் அக்கட்சியில் போட்டியிட்டவர்களில் பலர் திமுகவில் இணைந்திருக்கிறார்கள்.