குமரன் புத்தக இல்லம் 2011 செப்ரெம்பர் மாத முடிவில் லெனின் மதிவானம் எழுதியிருந்த “ பேராசிரியர் க. கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்” என்ற நூலினை வெளியிட்டது. மிகுந்த கருத்தியல் சிதைவுகளுக்குள் அல்லாடும் இன்றைய இலங்கை மற்றும் தமிழியல் சூழலில் காத்திரமிக்க சமூகப் பங்களிப்பிற்குரிய ஆளுமையான கைலாசபதியின் கருத்தியல் தெளிவைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்காக க. குமரனுக்கும் லெனின் மதிவானத்துக்கும் முதற்கண் நன்றியை தெரிவிக்க வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் நடுக் கூற்றிலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள்( 1955-1982) மிகுந்த முனைப்புடன் சமூகமாற்றத்திற்காக எழுத்தாற்றலைப் பிரயோகித்தவர் க. கைலாசபதி(5.4.1933-6.12.1982). மக்கள் போராட்ட களங்களோடு ஊடாடி, மக்கள் சக்தி விடுதலைத் திசைமார்க்கத்தில் வீறுட் எழுச்சிக் கொள்ள வழிப்படுத்தும் கொமிய10னிஸ்ட் கட்சியுடன் உறவுப10ண்டு, தன் அறிவை நடைமுறை அனுபவங்கள் வாயிலாக பட்டைத் தீட்டி செழுமைப்படுத்தி முன்னேறியவர் கைலாசபதி. அத்தகைய அவரது வளர்ச்சியில் அந்தக் காலக்கட்டத்தில் இலங்கைச் சமூகமும் இலங்கை தமிழ் மக்களும் தீர்க்கமான வரலாறு படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமையை அவதானத்திற்குட்படுத்துதல் அவசியம்.
லெனின் மதிவானத்தின் மேற்படி நூல் வீறுமிக்க அந்நக் காலத்தையும் அதன் வெளிப்பாடான ஆளுமையாக கைலாசபதி விளங்கியவாறினையும் துலக்கமாக காட்டி நிற்கிறது. கைலாசபதியின் வாழ்வும் வகிபாகமும் நூல் முழுமையும் தெளிவுப்படுத்தப்படடதோடு அமையாது, பின்னிணைப்பில் அவரது முக்கியத்துவமிக்க இரு கட்டுரைகளையும் லெனின் மதிவானம் தந்துள்ளார். “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் தலைப்பில் கைலாசபதியால் 1955 இல் எழுதப்பட்ட (தமிழகத்தில் வெளியான “சாந்தி” இதழின் முதலாவது ஆண்டு நிறைவு மலர்) கட்டுரை, முந்திய பண்டித மரபை மறுமலர்ச்சிக் கட்டமாய் வளத்து முற்போக்கு இலக்கிமாக வீறுகொள்ள உந்தித் தள்ளும் வளர்ச்சி நிலைக்கு ஏற்புடையதாக ஈழத்து தமிழ் இலக்கிய செல்நெறி கனிந்தமையைக் காட்டுவது. முற்றொரு கட்டுரையான “உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பின்னணியும் பின்நோக்கும்” என்பது 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியச் சதியை அம்பலப்படுத்தியது.
அந்த உலக தமிழாராய்ச்சி என்பது பயனுறுதிமிக்க ஆய்வியலாக அன்றி பிற்போக்கு சக்தியின் அரசியல் செயற்பாடாகவே அமைந்தது. ஏற்கனவே தரப்படுத்தலினால் புகையத் தொடங்கிய இனப்பகைத் தீ, இந்த மாநாட்டில் அரங்கேறிய இனவாதச் செயற்பாடுகளினால் கனன்று எரிந்து 1983 இனக் கலவரத்தோடு நாடு தழுவிய உள்நாட்டு யுத்தமாக பரிணமித்தமையை அறிவோம். அவ்வாறு அழித்தொழிப்பு யுத்த சங்காரத்தில் மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றலைத் தற்காலிகமாய்த் தடுத்து நிறுத்துவதற்கு பிற்போக்குவாதிகள் வாய்ப்பினைப் பெற்ற எண்பதுகளின் தொடக்கத்தில் கைலாசபதியின் மறைவு நேர்ந்து விட்டதை அறிவோம்.
இவ்வாறு, முற்போக்கு இயக்கம் எழுச்சியுற ஆரப்பித்து- பிற்போக்குவாதம் அதற்கெதிரான தடையை முடுக்கிவிட இயலுமாகிய கட்டம் வரையில் தமிழயல் பணியாளராகவும் முற்போக்கு போராளியாகவும் வாழ்ந்தவர் கைலாஸ். மேNலு காட்டிய “சாநதி” இதழ்க் கட்டுரையில் பிரேம்ஜி, எச். ஏம்.பி. மொஹிதீன், கே. டானியல், ‘புதுமை லோலன்’ ஆகியோர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் முன்னிணி வகிப்பதைக் கைலாஸ் கூறியுள்ளார். கூடவே, “நமது சமுதாயத்தின் முரண்பாடுகளை உணர்ந்து, பொருளாதார மாற்றத்துக்காக உழகை;கும் அரசியலி;ல் நம்பிக்கைக் காட்டும் இக்குழுவினர் பல காரணங்களால் போதிய அளவு இலக்கிய சிருஷ்டிககளில் ஈடுபடவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கியப் பரம்பரையை இவர்கள் உண்டுபண்ண முடியும்” என்ற நம்பிக்கையைக் க.கை. வெளிப்படத்துவார்(மேற்படி நூல்,ப.89).
“சரித்திரக்கதியில்” மறுமலர்ச்சிக் கட்டத்தை எட்டிய ஈழத்து தமிழ் அதிலிருந்து விடுப்பட்டு முன்னேறி(முற்போக்கு இலக்கிய அக்கங்களை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே) மறுமலர்ச்சியின் பயனை அடைய முடியும் எனக்கூறி, அந்தக் கட்டுரையில் அதற்கான நம்பிக்கையையும் தெரிவித்ததிலிருந்தது போலவே முற்போக்கு இலக்கிய இயக்கம் பின்னர் கனங்காத்திரமான படைப்புகளை வெளிப்படுத்தியிருந்தமையை அறிவோம். ஈழத்து இலக்கியச் செல்நெறி அவ்வகையிலான பண்பு hPதியான மாற்றத்தை எட்ட வேண்டும் எனத் தனது 22வது வயது இளம் பராயத்தில் வலியுறுத்திய கைலாஸ், அந்தப் பணியைக் கையேற்று இயங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்(இ.மு.எ.ச.) இணைந்து இயங்கிய பங்களிப்பாளராகவும் செயற்பட்டார்.
கைலாசின் இத்தகைய இயங்காற்றலை வெளிப்படுத்தும் லெனின் மதிவானத்தின் நூல் 8 அத்தியாயங்களை உடையது. (1) வாழ்க்கைப் பின்னணி, (2) எழுத்துக்கள், (3) பத்திரிகைத்துறை,(4) பல்கலைக்கழகம், (5) அரசியல்,(6) இலக்கிய அமைப்புகள், (7) விமர்சனங்கள், (8) நிறைவுரை என்ற தலைப்புகளின் கீழ் பருந்துப் பார்வையில் க. கை. யின் பன்மைப்பரிமாணத்தைக்காட்டி. மேற்கொண்டு ஆழமாக அவரைத் தேடு;ம் ஆர்வத்தை லெனின் மதிவானம் ஏற்படுத்தி விட்டுள்ளார்.
பின்னிணைப்புகளில் “கைலாசபதி பற்றிய முக்கிய தகவல்கள்” தரப்பட்ட பின்னர் “கைலாசபதியின் எழுத்துக்கள் வெளிவந்த பிரசுரங்கள்” பற்றிய விபரம் இடம்பெற்றுள்ளது. இவை , கைலாசின் பங்களிப்பையும் அவற்றை எத்தகைய களங்கள வாயிலாக வெளிப்படுத்pனார் என்பதையும் உணரத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. “உலகத் தமிழாராய்ச்சி…”, “ஈழத்து தமிழ் இலக்கியம்” எனும் மேலே குறித்த இரு கட்டுரைகள் பின்னிணைப்பில் அடுத்து இடம்பெறுவன் எழுதப்பட்ட காலவரிசை அடிப்படையில் அவை முன்பின்னாக மாற்றித் தரப்பட்டிருக்க வேண்டும்.
புpன்னினைப்பில் இறுதியாக தரப்பட்டுள்ளக் கட்டுரை “ சோஷலிசத்திற்கான பாதைப் பற்றி பேராசிரியர் கைலாசபதி” என்பது லெனின் மதிவானத்தால் வேறு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டு, “மலையகம் தேசியம் சர்வதேசம்” என்ற அவரது தொகுப்பு நூலில் இடம்பெற்றிருந்த கட்டுரையாகும். ஊண்மையில் அந்தக் கட்டுரை இந்நூலுக்குரிய கட்டமைப்பில் நிறைவுரை என்ற பகுதிக்கு முன்னதாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை கட்சி பத்திரிக்கையான “செம்பதாகை” இல் புனைப்பெயரில் சர்வNதுச விவகாரங்கள் பற்றி ஒரு பக்கத்தில் கைலாஸ் எழுதிய பத்தி எழுத்து குறித்து எழுதப்பட்ட தாகும். இதேபோல புனைபெயரில் அதே செம்பதாகையில் மற்றொரு பக்க பத்தி ஏழுத்தில் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த “ கருத்டதும் கண்ணோட்டமும்” க.கை. இனால் எழுதப்பட்டுள்ளது; இப்போது அதனை ஆய்வுக்குட்படுத்தி லெனின் மதிவானம் “இலங்கையில் உலமயமாக்கலின் ஊடுறுவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி” என்ற கட்டுரையை எழுதியுள்ளார். ( இது அண்மையில் வெளிவரவுள்ள லெனின் மதிவானத்தின் ‘ மலையக இலக்கியத்தின் சில பரிமாணங்கள்’ என்ற நூலில் இடம் பெறுகின்றது). “சோஷலிசத்திற்hகன பாதை பற்றி கைலாசபதி” பற்றிய கட்டுரைக்கு முன்னதாக இந்த உள்நாட்டு விவகாரம் குறித்த கைலாசின் பார்வையை ஆய்வக்குட்படுத்தும் கட்டுரையும் இடம்பெறும் போது இந்நூல் மேலும் முழுமைபெறும். குண்டிப்பாக அவசியபடவள்ள அடுத்த பதிப்பில் இந்தமாற்ற்ஙகளைக் காண இயலும் என நம்பலாம்.
11
இன்று எமக்கு கிடைத்துள்ள “பேராசிரியர் கைலாசபதி : சமூக மாற்றத்திதுக்கான இயங்காற்ற்ல்” என்ற லெனின் மதிவானத்தின் நூல் வழங்கும் கருத்துக்கள் மற்றும் கிளர்த்தும் விவாதங்கள் அடிப்படையில் சில விடயங்களை அலசுவது அவசியமானதாகும். கைலாசின் பங்களிப்பை வெளிப்படத்தும் இதே வேளையில் அவர் மீதான அபாண்டமான குற்ற விமர்சனங்கள் எத்தனை து}ரம் ஆதாரமற்றன என்ற விடயத்தையும் அம்பலபடுத்துவதாய் இந்நூல் அமைந்துள்ளது. கால- தேச நிலவரங்களின் பிரத்தியே தன்மை குறித்த அக்கறையின்றி மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பிரயோகித்தவர், வர்க்கப்பிரச்சனையை மட்டும் கவனத்தில் கொண்டு தேசிய- தலித்தியப் பிரச்சனைகளைபவ் புறக்கணித்தவர், பல்கலைகழகத்திற்கு வெளியே உள்ள ஆய்வாளர்களைப் பொருட்படுத்தாதவர் என்பன க.கை. மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களாகும்.
காலமாற்றத்தோடு வெளிப்படும் புதிய கருத்துகளை அங்கரித்து வளர்க்கும் போது, பல்கலைக்கழுகத்துக்கு வெளியே உள்ள ஆய்வாளரiயும் இனங்கண்டு வளர்க்கும் பண்பு எவரiயும் விட அதிகமாய் கைலாசிடம் உண்டு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “பாரதியின் மெய்ஞ்ஞானம்” நூலும் அதன் ஆசிரியர் ந.இரவீந்திரனும் உள்ளன(ர்). “ பாரதியிடம் பிற்போக்கான ஆன்மீகப் பார்வை காணப்பட்டாலும் அவரது சமூகப் பார்வை புரட்சிகரமானது” எனும் கருத்து பலரiயும் போல க.கை. இடமும் ஆரம்பத்தில் இருந்தது; அவரது நெறிப்படுத்தலில் “ பாரதி: பன்முகப்பார்வை” க்காக ந. இரவீந்திரன் “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற தலைப்பில் ஆய்வை Nமுற்கொண்ட போது தன்னால் வழிகாட்டப்படும் அந்த மாணவன் முன் வைத்த கருத்து தனது முந்திய முடிவுக்கு மாறானது என்ற தயக்கம் ஏதுவுமின்றி, அந்தப் புதிய கருத்தை ஏற்றுக் கொண்டு, அதனை விரிவுப்படுத்தி பாரதியின் ஆன்மீக நோக்கு குறித்து தனி நூல் எழுத அந்த மாணவனை ஆற்றுப்படுத்தினார்.
புhரதியின் அரசியல் இலக்கியத்துக்கான அடிப்படை உலக நோக்கு ஆன்மீகத் தளத்தினு}டாக வெளிப்பட்ட இயங்கியல்-பொருள் முதல் வாதம் என்பது அவரால் நெறிப்படத்தப்பட்ட மாணவனின் ஆய்வு முடிவாக இருந்தது. கருத்து முதல்வாத நிலை நின்று கடவள் அனைத்தையும் தீர்பார் என்ற நம்பிக்கையில் இயங்கும் ஆன்மீகவாதியாக அல்லாமல் ஆன்மீகத் தளத்தையும் புரட்சிகரமான உலக நோக்குக்கு மாற்றிய பாரதியின் ஆளுமையை ஏற்றுக் கnhள்வதற்கு தடையற்றவகையில் கைலாசின் ஆளுமை மார்க்சிய தெளிவுடன் வியாபித்திருந்தது. இத்தனைக்கும், “ அரசியல் இலக்கியமும் பாரதியும்” என்ற அந்த ஆய்வை மேற்கொண்ட மாணவன் பல்கலைகழகத்திலன்றி பலாலி ஆசிரிய கலாசாலையின் ஆசிரியப் பயினுராகப் பயின்று கொண்டிருந்தவன்; வெறும் பத்தாம் வகுப்புடன் பயிற்றப்படாத ஆசிரியராகி பயிற்றபட்ட ஆசிரியராவதற்கு பலாலி அசிரிய கலாசாலையை அடைந்தவன். “பாரதியின் மெய்ஞ்ஞானம்” வாயிலாக ஆய்வாளர்கள் மத்தியில் கவனம்பெற்று பின்னர் கல்வியில் முன்னேறுவதுடன் பல நூல்களையும் ந.இரவீந்திரன் எழுதுவதற்கு இவ்வகையில் அடித்தளமிட்டவர் கைலாசபதி.
முhர்க்சியவாதியாக பரிணமிக்காத பாரதியினால் இயங்கியல்- பொருள்முதல்வாதப் பார்வையை வரிக்க முடிந்தமையை ஏற்றுக் கொண்டது போன்றே சமூகப் பிரச்சனைகளை தனியே வர்க்கபேதம் சார்ந்து மட்டும் பார்க்கும் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது தேசிய-சாதி பேதங்கள் சார்ந்து அணுகித் தீர்வுக்கான போராட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் க.கை. பெற்றிருந்தார். “சாதி முறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற பதாகையுடன் எழுச்சியுற்ற 1966 ஒக்ரொபர் 21 மார்க்கத்திலான சாதி தகர்ப்பு போராட்டத்தை க.கை. உறுதியாக ஆதரித்திருந்தார். தொடரும் அதன் முன்னெடப்புக்கான அமைப்பாக தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் முதலாவது மாநாட்டு மலரில் க.கை. எழுதியிருந்த கட்டுரை இவ்விடத்தில் மிகுந்த கவனிப்புக்குரியது. தீண்டாமைத் தகர்புக்கான அந்தப்போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தும் போது, சாதியப் பிரச்சனையானது வெறும் மதப்பிரச்சனையாக இல்லாமல், அடிப்படையில் தேசிய பிரச்சனையாக உள்ளது என்று காட்டியிருந்தார். இன்று 40 வருடங்கள் கடந்த பின்னர் சாதி முறைமையை குறித்தும் தேசிய பிரச்சனை பற்றியும் புதிய தளங்களை எட்ட முடிந்தள்ளது. தொடர்ந்த ஆதாரங்களும் பல்வேறு நடைமுறை அனுபவங்களும் கைலாசின் அந்த அடிப்படைக் கருத்தை விருத்தி செய்யும் இடத்துக்கே வளர்த்தெடுத்து வந்துள்ளது.
இனமரபுக் குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவடைந்து உருவான ஐரோப்பியச் சமூக மாற்றங்களின் வரலாறு போன்று எமது சாதியச் சமூக அமைப்பு மாற்றங்கள் நடந்தேறவில்லை. சாதி என்பது எந்த சமயத்தின் கண்ட பிடிப்போ சதியோ பாவச் செயலோ அல்ல. எனக்கான ஏற்றத் தாழ்வுச் சமூக உருவாக்கம் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாய் பிளவடைந்து ஏற்படவில்லை; விவசாய வாய்ப்பை பெற்ற மருதத் தினைக் குரியதான இனமரபுக் குழு ஆளும் சாதியாகி, நிலத்தோடு பிணைக்கப்பட்ட தீண்டாதோர் எனும் ஓடுக்கப்பட்ட சாதிகளாயும், கைத்தெழில் சாதிகளாய் இடைச்சாதிகளாக்கப்படுதலாயும் ஏனைய திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்களை மாற்றிய சாதி வாழ்முறை எமக்கான பிரத்தியேகத் தன்மை உடையது. ஆத்தகைய புதிய வாழ்க்கைக் கோலமாகிய சாதி முறைமைக்கான கருத்தியலை வடிவமைக்கும் சாதியாக பிராமணர் உருவாகினரேயன்றி பிராமணசட சதியால் சாதி வாழ்முறை தேன்றி விடவில்லை. கருத்’து வாழ்க்கை கோலத்தைக் கட்டமைப்பதற்கு முன்னதாக, வாழ்முறை வெளிப்பாடாகவே கருத்து பிறக்கிறது!
சாதிமுறையின் தோற்றம்- வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்தியல் தளங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளைத் தொகுத்து மார்க்சிய அடிப்படையில் அணுகும் போது மார்க்சியப் பிரயோகத்தை செலுமைப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்தம் பதிய பரிமாணங்களையும் வந்தடைந்தள்ளோம். ஒரு புறம் மார்க்சியத்தின் போதாமை காரணமாக சாதிப்பிரச்சனையை தலித்தியவாதபடபார்வையிலேயே அணுகவும் தீர்க்க முயற்சிக்கவும் இயலும் என்ற எத்தனிப்புகள் முன்னெடுக்கப்பட்டு தோற்றுவிட்டமையை தலித் சிந்தனையாளர்கள் கூட இன்று ஏற்கம் நிலை உருவாகியுள்ளது. மறுப்புறம், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டும் போதும் – சாதிப்பிரச்சனைத் தானே தீரும்; சாதியத்துக்கு எதிரான விசேடித்த போராட்டங்கள் வேண்டியதில்லை என்று இந்தியாவில் மார்க்சியர்கள் முன்னெடுத்த வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மீண்டு, இன்று மார்க்சியர்கள் சாதிமுறை கறித்த ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்.
இதன் பேறாக இரட்டைத் தேசியக் கோட்பாடு தொடர்பான விவாதத்தை இன்று இந்திய ஆய்வுத் தளத்தில் அரும்பு நிலையில் காணக்கூடியதாக உள்ளது. இது சிறு பொறியாக உள்ளதாயினும், விரைவில் பெருந்தீயாக எழுந்து சிந்தனைத் தளத்தில் தேங்கிப் போன பழைய குப்பைகள் பொசுங்கி சாம்பலாகிவிட, புதிய வீச்சுடன் மார்க்சியப் பார்வையும் நடைமுறையும் உலகை மாற்றக் களமிறங்கும் என நம்பலாம். மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை மீறவியலாத புனித அருள் வாக்குகளாக கருதி விடாமல் மார்க்சிய-லெனினய சிந்தனை முறை வழிப்பட்டு எமக்குரிய பிரத்தியேக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுத்துப் பிரயோகிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
இதற்கான தடைகள் இந்தியாவில் நிறைந்துள்ளன. முன்னர் அம்பேத்கர் தலித் இயக்கத்தை முன்னெடுத்தபோது மார்க்சியர்கள் அதனைத் தமக்குரிய பணியாகக் கருதி நட்பு சக்தியாக்கத் தவறி வர்க்கப் பிரச்சனையை மட்டும் பார்த்ததால் எந்தளவு அகநிலைத் தவறு இருந்ததோ, அதேயளவு சாதிவாதம், மதவாதம், ஆரிய- திராவிட இனவாதம் என்பனவற்றைத் து}ண்டிய ஏகாதிபத்தியச் சதி என்கிற புறநிலைத் தாக்கமும் இருந்துள்ளது.( இலங்கையில் இனவாதமே போதுமான பிளவுபடுத்தல் சதி ஆயுதமாக இருந்தமையால் மார்க்சியர்கள் அனைத்துச் சாதிகளையும் ஐக்கியப்படுத்தி கொண்டு சாதிய இழிவுக்கெதிராகப் போராட சாத்தியமாயிற்று).
அத்தகைய சாதியத் தகர்ப்பு போராட்டங்கள் வர்க்கப் பார்வையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போது ஒடுக்கும் வெள்ளாளச் சாதியை எதிரியாகக் கட்டமைக்கவில்லை; “ சாதியமுறை தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற முழக்கத்தில் முன்னேறிய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் வெள்ளாளர்களில் இடதுசாரி உணர்வாளர்கள் மட்டுமன்றி, சாதிய இழிவுகள் ஒடுக்கப்பட்டோரை மட்டுமன்றி தம்மையும் அவமானப்படுத்துவதென கண்டு வெட்கப்பட்ட அனைத்து நல்லெண்ணங்கொண்ட ஜனநாயக சக்திகளையும் ஐக்கியப்படுத்தியிருந்தது. அதன் உச்சநிலைப் போராட்டமாக நிலப்பிரபுத்துவ கெடுப்பிடியில் பிராமண உடைமையாகவும் வெள்ளாள ஆதிக்க கொடுமுடியாகவும் விளங்கிய மாவிட்டப்புரக் கோயில் பிரவேசப் போராட்டம் அமைந்தது. இந்மதத்தை தகர்ப்பதற்கு அவசியமில்லாமலே , அதன் சாதிய இழிவை ஒழிக்க இயலும் என்பதை அந்தப் போராட்டம் உலகுக்கு எடத்துக் காட்டியிருந்தது.
மாறாக இன்று இந்தியாவில் தலித்தியவாதம் தொடர்ந்தும் பிராமண- மற்றும் ஆளும் சாதிகளை எதிரிகளாய்க் கட்டமைப்பதோடு இந்துமதத்தை தகர்ப்பதே பிரதான பணியெனக் கூறி போராட்டச் சக்திகளை பிளவுப்படுத்தி இலக்கின்றி சிதறடித்து சமூகமாற்ற நடவடிக்கைகளுக்கு துரோகமிழைத்து வருகிறது. ஆன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிளவுப்படுத்தல் சதிக்கு தன்னை அறியாமல் அம்பேத்கர் இடமளிக்க நேர்ந்ததில் சுதந்திரப்போhரட்டங்களை முன்னெடத் பிராமணத் தேசியத்தின் தவறே பிரதானமானதாக இருந்தது. இதனைக் கண்டுக் கொள்ளாமல் கம்ய10னிஸ்ட்டுகள் அரவணைக்க வேண்டிய அம்பேத்கரை எதிரியாக்கியமையில் சுய விமர்சன hPதியாக ஏற்ற வேண்டிய தவறு இன்று உணரப்பட்டுள்ளது. இந்தியத் தேசியம் பிராமணத் தலைமையில் உயர்சாதி நலன்களை உறுதிப்படுத்த முனையும் போது தலித் தேசியம் எதிர் நிலைப்பாடு கொள்ளும் வகையில் இரட்டைத் தேசிய பிளவு நிதர்சனமாய் உள்ளமையை அன்று புரிந்துக் கொள்ள தவறிய போதிலும் இன்று கம்ய10னிட்டுகள் தலித் விடுதலைக்கான சரியான திசைவழியிலான போராட்டங்களை இந்தியாவில் முன்னெடுத்துவரக் காண்கின்றோம்.
இந்த முயற்சியுடன் கைக்கோர்க்கத் தவறி, தலித்தியவாத சக்திகள் போராட்ட மார்க்கமின்றி தறிகெட்டழியும் இலக்கற்ற வழிக்கு ஆட்படுத்த முயலுகையில் உண்மையில் ஏகாதிபத்தியமாய் பரிணமிக்கும்உலகமயக் கூட்டினை உடையதான இந்திய சாதி வர்க்க ஆதிக்க கும்பலுக்கே பணிசெய்கிறவர்கள் ஆகிறார்கள். இவ்வகையில் மாறிவரும் உலகச் சமநிலை மாற்றம் பற்றிய புரிதலின்றி மார்க்சியம் பேசும் சிலரும் தலித்தியவாத நிலை நின்று இந்து மதத் தகர்ப்பே சாதியொழிப்புக்கு வழிகோலும் என்ற தறிகெட்டழியும் தர்க்கங்களை முன்வைப்பவர்களாயிருக்க காண்கின்றோம். முன்னர் தலித் தேசிய நிதர்சனத்தைக் காணத்தவறி பிராமணத் தேசியத்தின் வாலாக இருந்தது போல, இன்று மற்றொரு முனைக்குத்தாவி தலித் தேசிவாத முடக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
உண்மையில் இரட்டை தேசியத்தின் யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு, விடுதலை பிளவுப் படாது என்ற அடிப்படையில் அனைத்தும் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமே அன்றி ஒரு முனைவாத தவறுகளில் ஒன்றிலிருந்து மற்றதற்கு தாவுவது பயனற்றது; மட்டுமன்றி, எதிரிக்கு உதவுவது. முக்கள் விடுதலையில் தலித் விடுதலை தவிர்க்கவியலாத அங்கம் என ஏற்பவர் ஆளும் சாதித் தேசிய வடிவமாயுள்ள இந்துமதம் சார் அம்சங்களில் மக்கள் விடுதலைக்குரிய கூறுகளை இனங்கண்டு அவற்றோடு ஐக்கியப்பட்டு, ஆதன் ஆதிக்கவாத நிலைப்பாட்டை தகர்ப்பதற்கு முனைய வேண்டும். முhவிட்டபுரக் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இக்குணாம்சம் வெளிப்பட்டது. இவ்வகையில் இரட்டைத் தேசிவாத கோட்பாட்டை மார்க்சிய அணிகள் விவாதிக்க முன்வராதிருப்பதில் இந்திய மேலாதிக்கவாத ஊடுறுவல் செயற்படாமல் இல்லை( மார்க்ஸ், லெனின் ஆகியோரது வசனங்களில் சிறைப்படும் மார்க்சிய-லெனினிச சிந்தனைப் பாங்கற்ற அகநிலைவாத தவறுடன் இணைத்து இந்தப் புறநிலைத் து}ண்டலைக் காண வேண்டும்).
எமக்கான தேசிய இனப்பிரச்சனை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வகைப்பட்ட மொழிசார் தேசியம் என்பதோடு முடிந்து விடவில்லை. முஸ்லிம் தேசியம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத் தொடக்கத்தில் கவனங்கொள்ள அவசியமான பிரச்சனையாக எழுந்து மொழிக்கும் அப்பால் தேசியப் பிரச்சனையில் மதத்துக்குரிய பாத்திரத்தை வலியுறுத்தியது. முப்பதுகளில் திராவிடத் தேசியம் பெரியாரால் முன்னிறுத்தப்பட்ட போது இனத்தேசியம் கவனிப்புக் குரியதானது; இது பின்னர் இந்திய தேசியத்தினுள் மொழிசார் இனத்தேசியங்களின் சாத்தியத்தை இயலுமானதாக்கியது. முன்னரே, இந்தியத் தேசியம் எழுச்சியுறத் தொடங்கிய கையோடு ஜோதிராவ்ஃப10லே, அயோத்திதாசர் போன்றோர் இந்தியத் தேசியம் அடிப்படையில் பிராமணத்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்;டுக் காட்டினர். ஏதிர்தேசிய எழுச்சிக்கான அவசியத்தை தொட்டுக்காட்டினர். அப்போது அரும்பு கொள்ளத் தொடங்கிய தலித்கருத்தியல் முப்பதுகளில் அம்பேத்கரால் தலித்தேசிய இயக்க நடைமுறையாக வளர்க்கப்பட்டது.
ஆக, எமது தேசியப் பிரச்சனை மிகுந்த சிக்கல் பண்புடையது. இடதுசாரி பண்புடனான இல்கைத் தேசியத்துடன் ஐக்கியப்பட்ட மக்கள் விடுதலைத் திசை மார்க்கத்துக்குரிய ஒடுக்கப்பட்ட மக்களின் சாதித்தகர்ப்புப் போராட்டத்ததை இலங்கையில் கம்ய10னிட்டுகள் முன்னெடுத்த போது தலித் பண்புடன் எதிர்த்தேசிய வடிவம் கொள்ள அவசியமில்லாமல், அதுவே வரலாற்றின் பிரதான செல்நெறியாக அன்று இருந்தது. ஆளும் வெள்ளளத் தேசியமாக குறுகிய இனவாத முடக்குவாத நோய்க்கூறுடனான ஈழத்தமிழ் தேசியம் அதனோடு ஐக்கியப்பட முன்வராமல் எதிர் மனப்பாங்கை கொண்ட போதிலும் அது எதிர்த்தேசிய வடிவம் உடையதல்ல. இந்தியாவில் போன்று ஆளும்(பிராமண- வெள்ளாள) சாதித் தேசியங்களுக்கு எதிர்த்தேசியமாய் இங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் அமையாமல் போனமையில், இலங்கையில் மார்க்சியர்களது சரியான நிலைப்பாடு மட்டுமன்றி விNசுடித்த பண்பு வேறுபாடுகளும் காரணமாக அமைந்திருந்தமை கவனிப்புக்குரியன(இலங்கையிலும் தமிழனத் தேசியம் குறித்த சரியான பார்வை எட்டப்படவதில் காலதாமதம் ஏற்பட்ட தவறு இருந்ததாயினும,; சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசியத்தை ஒடுக்க முனைந்த போது அதற்கு எதிராக தலித் தேசிய எதிர் நிலைப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, கம்ய10னிஸ்ட்டுகளும் சரி இயங்கவில்லை).
இத்தகைய இரட்டைத் தேசிய- தமிழினத் தேசியப் பிரச்சனையில் கைலாசபதி தனது நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படத்த மன்னர் மறைந்துவிட்டபோதிலும், இன்று நாம் வந்தடையும் திசை மார்க்கத்திலேயே அவரது பயணிப்பு அமைந்திருந்தது என்பது தெளிவு. இதனை லெனின் மதிவானத்தின் இந்த நூலும் தமிழ்த்தேசியம் குறித்த கைலாசபதியின் பத்தி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட (மேலே குறித்த) கட்டுரையும் எடுத்துக்காட்டுகின்றன.
111
இப்படிச் சொல்லும் போது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியை முன்னிறுத்தி வேறு சாத்தியம் குறித்து பேசுகின்றவர்கள் இருக்கின்றனா எனும் யார்த்தம் புறக்கணிப்புக்குரியதல்ல. இரட்டைத் தேசியம் குறித்த விவாதங்கள் கா.சி. அவர்களோடு கலந்துரையாடப்பட்ட போதிலும் அதனைக் கவனத்தில்லெடுக்கவோ அது தொடர்பில் கருத்துக் கூறவோ கா.சி. முன் வந்ததில்லை. மாறாக, ஈழத்தமிழ் தேசியம் முற்றிலும் ஆளும் சாதித்தேசியமாக அதற்கான பாசிச வடிவ முன்னெடுப்பில் வளர்ந்து வந்த போது அதனை அவர் ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார். அந்தக் கட்டத்தில் கைலாஸ் இருந்தால் கூட தமிழினத்தேசியத்தை(அதன் ஆதிக்க சாதித் தேசியப் பண்பு பற்றிய புரிதல் கொள்ளாமல்) தவிர்க்கவியலாதவகையில் ஏற்றிருப்பார் எனக் கூறுவோர் உளர்.
‘செம்பதாகை’ பத்தி எழுத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் ‘வியாபாரக் கூட்டணி’ ( தமிழர் விடுதலைக் கூட்டணியை இப்படிதான் கைலாஸ் சுட்டினார்) இரத்தம் சிந்தா யுத்தமான அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட பாணி குறித்துக் கடும் கிண்டல்களுடனும் கண்டனங்ககோடும் கைலாஸ் எழுதியது பற்றி லெனின் மதிவானம் தனது கட்டுரையிலும் நூலிலும் காட்டியுள்ளார். அந்த வியாபாரக் கூட்டணியின் பிற்போக்கு தனங்களுக்கு எதிராக மார்க்சிய அக்கறையோடு இளைஞர் இயக்கங்கள் எழுச்சி பெற்று வந்தமையை க.கை. ஆர்வத்துடன் ஆதரித்து எழுதி வந்தார். அந்த இடதுசாரித்துவ இளைஞர் எழுச்சி நீடிக்க இயலவில்லை; துப்பாக்கி ஏந்திய அமிதலிங்கமாக( அமிரால் ஆசையோடு தம்பி என்று அழைக்கப்பட்ட) பிரபாகரன் தமிழனத் தேசியத் தலைமையை அபகரித்து முன்னெடுத்த பிற்போக்கு யுத்த முன்னெடுப்பு எவ்வகையிலும் அமிரிலிருந்து வேறுப்பட்டதில்லை என்பதை கைலாசபதி காணத் தவறியிருக்க மாட்டார்(சிவத்தம்பியால் காணவியலாமல் போனதற்கான காரணம் உலகமறிந்த ரகசியம்). துப்பாக்கி எந்தாத பிரபாகரனாக இருந்த அமிரின் சர்வதிகாரப் பாசிசப் போக்குகள் பற்றி அவர் தனது பத்தி எழுத்தில் பதிவு செய்துள்ளார். காந்திவாத ஜனநாயக வேடம் ப10ண்ட முன்னோடித் தலைவரை பாசிசவாதியாக இனங் கண்டவருக்கு நேச சக்திகளாக தமிழ்த் தேசியம் அரவணைத்திருக்க வேண்டிய இடதுசாரிகளைக்கொன்றொழித்த இராணுவத் தலைவரின் வெளிப்படையான பாசிச நிலைப்பாட்டை இனங்கண்டிருக்க இயலாதா?
கைலாசபதியும் சிவத்தம்பியும் ஐம்பதுகளின் நடுக் கூறிலிருந்து எழுச்சி பெற்ற முற்போக்கு இயக்கத்தின் வெளிபாடுகள்; அது வீறுடன் முன்னேறிச் காதனைகள் பல நிகழ்த்த ஏற்ற சிந்தனைக் கரூவ10லங்களை வழங்கியவர்கள். புதிய தளவிரிவாக்கங்களைச் சாத்தியமாக்கியவர்கள். அதன் காரணமாகவே கைலாசபதி தொடர்ந்து இருந்திருப்பின் கா.சி;. போல மாற்றச் சிந்தனைக்கு ஆட்பட்டிருப்பார் எனப் பலரும் கருத இடமேற்படுகிறது. இருவரும் மார்க்சியச் செல்நெறியில் ஒரே திசைவழியில் பயனிப்பைத் தொடங்கிய போதிலும் ஒரு தசாப்த்தத்தில் பிளவொன்றைக் கண்டவர்கள். இருவருமே மார்க்சியப் பார்வையைத் தொடர்வதாக வெளிப்பார்வைக்குப்பட்ட போதிலும், இருவேறு கருத்தியல் நிலைப்பாடுகளுடனேயே வளர்ந்தவர்கள்.
இந்தப் பிளவுக்கு அடிப்படையாக அமைந்தது பாட்டாளிவர்க்க இயக்கச் செல்நெறியானது சேவியத்- சீன முகாம்களாகப் பிளவுப்பட்டதில் அடங்கியுள்ளது. சோவியத் கம்ய10னிஸ்ட் கட்சி முதாளித்துவத்துடன் சமாதான சகவாழ்வு பற்றிப் பேசி வலது விலகலைத்தொடங்கிய போது சீனத்தரப்பில் மார்க்சியத்தைப் பாதுகாக்கும முனைப்பு ஆரம்பத்தில் வெளிப்பட்டது. காலப்போக்கில் சீனத்தரப்பில் வன்முறை வழிப்பாட்டுக்கு ஆட்படுவது உள்ளிட்ட இடதுவிலகல் ஏற்படுவதைத் தவிர்க்கவியவில்லை. கலாசாரப் புரட்சி அவ்வகையில் வளர்ந்த போது அது சீன கம்ய10னிஸ்ட் கட்சியால் இடைநிறுத்தப்பட்டதை அறிவோம். இத்தகைய மாற்றச் செல்நெறிக்கு பிறகு 1981 இல் சீன பயணம் சென்று திரும்பிய க.கை. சீனாவில் அறுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் முனைப்படைந்த அதிதீவிர இடதுவிலகலில் இருந்து மீள்வதற்காக முன்னெடுக்கப்படும் புதிய நடவடிக்கைகள் குறித்து எழுதியிருந்தார்(அதன் போது வலது சாய்வுக்கான வாய்ப்புகள் பற்றிய எச்சரிக்கையும் விடுத்திருந்தார்).
இது போன்ற எந்தத் தேடலும் தெளிவும் கா.சி. அவர்களுக்குத் தான் பின்தொடர்ந்த சோவியத் ய10னியன் பற்றி இருந்ததில்லை. தனது விமர்சனங்கள் அனைத்தையும் இலங்கை மற்றும் தமிழியல் தளம் சார்ந்து மட்டுமே மேற்கொண்டார். இலஙகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில்(1970-1977) இணைந்திருந்த சோவியத் சார்பு கம்ய10னிஸ்ட் கட்சியோடு ஒட்டியிருந்தவர் கா.சி.; அக்காலத்தில் இனமுரணை தீர்க்க இருந்த வாய்ப்புகளைத் கைவிட்டதோடு மோசமான சிங்களப் பேரினவாதத் தவறுகளை அந்தக் கூட்டரசாங்கம் மேற்கொண்டது. அந்த ஆட்சிக்காலத்தில் அதுதொடர்பில் எந்த விமர்சனங்களுமின்றி கட்சியோடு இழுப்பட்டபின்னர், படுதோல்வியடைந்து நிராயுதபாணியாகிவிட்ட நிலையில் யாழ்பாண மேலாதிக்க ஆளும் சாதித் தேசிய பண்புடையதான ஈழத்தமிழ்த் தேசியத்திடம் சரணடைந்தார் கா.சி.; மட்டுமன்றிப் பாமன்னிப்புக்கோரி, இடதுசாரிகள் தவறு செய்து விட்டார்கள் – முற்போக்கு இயக்கம் பிழைகள் செய்துவிட்டது எனத்தடம் புரண்டார்.
இதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம் சார்ந்த சலனங்களுக்கு ஆ;பட்டார்; மார்க்சிய நிலைப்பட்டு காதியத் தகர்ப்பு, பௌண்விடுதலை. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எனும் போராட்டங்களைக் காண இயலாதவரானார்; பிளவு படாத விடுதலை அங்கங்களாய் இவற்றைக் கருதி, இவற்றுக்காகப் போராடு;ம் சக்திகளை ஐக்கியப்படுத்தும் குறிகோளுடன் ஆதரிப்பதாய் இருக்க வேணடிய நிலைப்பாட்டிலிருந்து விலகினார்; உலகமயமாதல் மற்றும் பின்நவீனத்துவ நிலைநின்று போராடும் மக்கள் சக்கியைப் பிளவுப்படுத்தும் வகையில் காதியவாதம்(தலித்தியம்), பெண்ணியவாதம், இனத்தேசியவாதம் என்பவை ஒன்றையொன்று எதிர்க்கும் தளத்தில் இருக்கும் வகையில் அவையொவ்வொன்றையும் ஆதரித்தார். மார்க்சியத்திலிருந்து முற்றிலும் விலகிய இத்தகைய ஒருமுனைவாத முனைப்புடைய கருத்தியலையே இறுதிக் காலத்தில் சிவத்தம்பி கொண்டிருந்தார்; முன்னாள் மார்க்சிய கருத்தியலின் அனைத்துப் பண்புகளையும் சீர்து}க்கி ஆய்ந்து முடிவுகாணும் பண்பின் சில சாயல்கள் மட்டும் அவ்வப் போது அவரது ஆளுமையை வெளிப்படத்தியது-பாதுகாத்தது.
இத்தகைய சலனங்களுக்கு க.கை. ஆட்பட அவசியமில்லாத அரசியல் செல்நெறியுடையதாக அவர் பின்பற்றிய அரசியல் அணி அமைந்திருந்தது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சாதிவெறியர்களதும் அரசியந்திரத்தினதும் ஆயுத ஒடுக்கு முறைக்கு உள்ளான போது, வன்முறை வழிபபாட்டுக்கு எவ்வகையிலும் இடமளிக்காமல், அதேவேளை கட்சி முடிவு அடிப்படையில் அவசியமான ஆயுத வழிபட்ட பதிலடியை வழங்கிய சீன சார்பு கம்ய10னிட் கட்சியை க.கை. ஆதரித்து பின்பற்றினார். அந்தக் கட்சி கூட்டரசாங்கத்தில் தவறுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடாத்தியது; சுயநிர்ணயம் பற்றிய தேடலை இனமுரண்கூர்மையடைந்த போது தாமதமின்றி முன்வைத்தது. அந்தவகையில் எழுபதுகளில் முனைப்படைந்து வந்த வலதுசாரி பிற்போக்கு பாசிசஈழத் தமிழ் இனத்தேசியம் இழைத்த தவறுகளை அம்பலப்படுத்தியவாறே அதனை முறியடித்தவாறு என்பதுகளின் தொடக்கத்தில் எழுச்சியுற்று வந்த இடதுசாரி ஈழத்தமிழினத் தேசியத்தை வரவேற்க க.கை. யினால் இயலுமாயி;ற்று; பின்னர் ஏன் பாவமன்னிப்புக் கோரும் அவசியம் கைலாசபதிக்கு ஏற்படப் போகிறது?
இவ்வாறு ஒப்பீட்டுக்கு உள்ளாக்குவது சில தவறான முடிவுகளுடனான எதிர்வுக் கூறல்களை நிராகரிப்பதற்கேயன்றி, எமக்கான பாதையை வகுத்து வழங்கிய இருபெரும் பேராசிரியர்களில் ஒருவரை வழிப்பாட்டுக்குள்ளாக்கி, அதை வலுப்புடுத்தவதற்காக மற்றவரைக் குறைமதிப்பீடு செய்வதற்காக அல்ல. பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது ஐம்பது வருட செயற்பாட்டில் முன்பாதியில் மார்க்சிய நிலைப்பாட்டில் மகத்தான பங்களிப்புகளை நல்கியுள்ளார்; பின் பாதியில் மார்க்சியத்தில் இருந்து விலகிய போதிலும் தலை சிறந்த தமிழ் அறிஞராக பங்களிப்ப நல்குவதற்கு ஏற்றதாக முந்திய மார்க்சிய அறிவு உதவியவகையில் காத்திமான தமிழியலாளராக கா.சி.இனால் திகழ முடிந்தது. அந்த வகையில் மார்க்சிய விலகல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கற்பதற்காக களமாக இந்த ஒப்பீடு அமைய இயலுமேயன்றி கா.சி.யைக் கொச்சைப்படுத்த அவசியமில்லை- முடியக் கூடியதுமல்ல.
அதேபோலவே, கைலாசபதி வழிபாடும் எவ்வகையிலும் அவசியமற்றதாகும் இரட்டை தேசியம் பற்றிப் புதிதாக பேச முனையும் போது கைலாசுடன் போட்டால் தான் அது நின்ற பிடிக்கும் என்பதோ, எமது சிந்தனை வெளிப்பாடுகள் அவர் பெயரைப் பராயணம் பண்ணித்தான் கவன ஈர்ப்பும் பெறவியலும் என்பதோ இல்லை. மார்க்சியச் சிந்தனை இத்தகைய பலவீனங்களுக்குரியதல்ல. மாறும் சமூக வளர்ச்சிப் போக்கில் புதிய தள விரிவாக்கத்துக்கு இடமளித்து மாற்றங்களை உள்வாங்கியவாறு புத்தாக்கம் பெறும் சிந்தனை முறையே மார்க்சியம் என்கிறவகையில் இரட்டைத் தேசியக் கோட்பாடு தன்னளவிலேயே தாக்கம்பெறும். ஆதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்யாத போதிலும் அதற்கான அடியெடுத்துக் கொடுக்கும் வரலாற்றுப் பாத்திரத்தை உடையவராக கைலாசபதி இருந்தார் என்பது ஒரு அவசியமான பதிவு.
வரலாறு வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களினதும் மாற்றங்களினதும் செல்நெறி மட்டுமல்ல, முன்னேறிய இனமரபுக் குழு ஆளும் சாதித்தேசமாக சமூக பண்பாட்டு ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளராகி ஏனைய இன மரபுக்குழுக்களை இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதித்தேசங்களாக மாற்றி அவற்றிடையே நடந்து வந்த போராட்டங்கள் – மாற்றங்கள் வாயிலாகவும் இயங்கிவந்துள்ளது. முன்னதான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த ஐரோப்பிய சமூகத்தில் கூர்மையான அரசியல் புரட்சிகள் சமூக மாற்ற
வடிவமாக இருந்த போது, பின்னதாய்க் கவனம் பெறும் சாதிச் சமூகத்தில் பண்பாட்டுப் பரட்சியே சமூகமாற்ற வடிவமாக அமைந்துள்ளது. இலங்கைச் சமூகம் காதியத்தகர்ப்புப் போராட்டத்தை மார்க்சிய வழிகாட்டலில் முன்னெடுத்த வரலாற்றுச் செல்நெறியின் சிந்தனை வெளிப்பாடாக முகிழ்ந்த கைலாஸ், பக்திபேரியக்கத்தை சமூக அமைப்பு மாற்றத்துக்குரிய இயக்கு சக்தி எனக் காட்டியதன் வாயிலாக இதற்கான அடியெடுத்துக் கொடுத்தார். இவ்வகையில் மார்க்சியத்தின் எமக்கான பிரயோகத்தை இலங்கை மார்க்சியர்கள் தலைமையேற்று நடாத்திய போராட்டங்களை முன்னிறுத்தி தமிழியல் வெளிப்படுத்திய கைலாசபதி, இரட்டை தேசியம்- பண்பாடுப் புரட்சி வடிவங்கள் பற்றிய புதிய பரிமாணங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தார் என்பது அழுத்தி உரைக்க வேண்டிய அம்சமாகும். மிக சுருக்கமா நூலொன்றில் இவற்றைத் தொட்டுக்காட்டி விரிவான ஆய்வுத் தளங்களுக்கு லெனின் மதிவானம் “ பேரரிரியர் கைலாசபதி: சமூக மற்றத்துக்கான இயங்காற்றல்” எனும் இந்நூல் வாயிலாக அடிகோலியுள்ளார்.
(முற்போக்கு கலை இலக்கிய மன்றம் 9.10.2011 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்த “ பேராசிரியர் கைலாசபதி: சமூகமாறறத்திற்கான இயங்காற்றல்” நூல் விமர்சன அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துருவாக்கம்).