தூதனுக்கு தோதாய் வந்ததுதான் மும்பையில் நிகழ்ந்த தீவீரவாத தாக்குதல்கள். தீவீரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்தார்கள்.பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராஹிம்தான் தீவீரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்தான் என்றெல்லாம் இந்தியா குற்றம் சட்ட,அதற்கான ஆதரங்களை ஒப்படைத்தால் அவர்களை எங்கள் நாட்டு நீதி மன்றத்திலேயே தண்டிக்கிறோம்.என்று பாகிஸ்தான் எதிர்ப்பாய்ச்சல் பய்கிறது. இரு நாட்டு எல்லைகளிலும் பதட்டம் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர் ஏதிராக படைகளை நிறுத்துகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தேசீய வெறியைக் கிளப்ப பாகிஸ்தானுடன் ஒரு யுத்தத்தை இந்தியா நடத்தித்தான் முடித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.யுத்தம் வேண்டும் என இந்தியா ஆசைப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவின் புதிய கருப்பு தேவதூதன் ஆசைப்படுகிறார்.
கருப்பின் விடிவெள்ளி வாயைத் திறந்து விட்டார். ‘‘இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவீரவாத முகாம்களைத் தகர்க்கவும் தீவீரவாதிகளை அழிக்கவும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம். இந்தியா அப்படி போர் தொடுத்தால் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கும்’’ என்று யுத்த சங்கை எடுத்து ஊதியிருக்கிறார். இந்த கருப்பு தோல் கொண்ட வெள்ளை மனதுக்காரர். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஆப்கான் மீது படையெடுத்த அமெரிக்கா தீவீரவாதிகளை அழித்த கதைகளையும். தலிபான்களை ஒழித்து அங்கு ஜனநாயகத்தை பரிசளித்த யோக்கியதையும் நாம் பார்த்தோம். இன்றும் ஆப்கான் வீதிகளில் வலம் வருகிற அமெரிக்கப் படைகள்.தினம் தோறும் அங்கு ஆப்கான் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஜனநாயகத்தை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.பாலியல் வன்முறை, சட்டவிரோத காவல், கடத்திக் கொல்லல்,போர் நெறிக்கு புறம்பான கிளஸ்டர் குண்டுகளை வீசுதல் என அமெரிக்காவின் ஜனநாயகத்தை நாம் பார்த்தோம்.பிறந்த குழந்தைகளும் பிறக்கப் போகிற குழந்தைகளும் புதுப் புது நோய்களால் அவதிப்பட்டு அமெரிக்காவின் ஜனநாயகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து ஓசாமாவை அழிக்கப் போகிறோம் பேரழிவு ஆயுதங்களைக் கைப்பற்றுகிறோம் என்று ஈராக்குக்குள் அத்து மீறி நுழைந்து சதாமைத் தூக்கிலிட்டது அமெரிக்கா. டன் கணக்கில் வீசப்பட்ட விஷக் குண்டுகளால் ஈராக்கின் எல்லா குடி மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.இன்று ஈராக்கியர்கள் அமெரிக்கா ஈராக்கில் உருவாக்கிய பொம்மை அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கத் தயராக இல்லை. ‘‘வெள்ளை நாய்களே வெளியே போங்கள்’’ என்று தினம் தோறும் அடித்துத் துரத்துகிறார்கள்.அமெரிக்க படைகள் வியட்நாமில் சந்தித்த தோல்வியையும் உயிரிழப்பையும் அமெரிக்கா இன்று ஈராக்கில் சந்தித்துக் கொண்டிருக்கிறது.அமெரிக்க படைகளுக்கு எதிராக ஈராக்கியர்கள் வீரம்செரிந்த போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்கா அரசை நடத்தும் அமெரிக்க ஆயுத வியாபாரிகளே இந்தப் போரை நடத்துகிறார்கள். அமெரிக்காவின் அதிபராக கருப்பர் வரலாம். அதன் மூலம் அமெரிக்கா தனக்கான புதிய முகமூடியை மாட்டிக் கொள்ளலாம். ஆனால் அந்த புதிய முகமூடி யாருடைய பிரதிநிதி என்பதுதான் நியாயமான மக்களின் கேள்வி.
நடந்து முடிந்த தேர்தலின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. திவாலாகிக் கொண்டிருக்கும் ஒரு நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்ன மாற்றம். ஆயுத விற்பனையை எல்லா காலத்திலும் ஒரே இடத்தில் விற்க முடியுமா?அதனால்தான் ஈராக்கில் சொன்ன அதே பேரழிவு ஆயுதங்கள், ஓசாமா,அல்கொய்தா என்ற பெயர்களைச் சொல்லி ஈரானுக்கு போரை விரிவு படுத்த திட்டமிட்டது அமெரிக்கா. ஓபாமா வந்தவுடன் ஈராக்கிலிருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று சொல்லவும். ஆக்ரமிப்புப் படைகளை அடுத்து எங்கே அனுப்புவது என்ற கேள்வி எழுகிறது.ஈரானின் நினைத்த மாதிரி எந்த காரியத்தையும் செய்ய முடியாத படி மத்திய கிழக்கு நாடுகளும் சீனா,ரஷயா போன்ற நாடுகளும் ஈரானுக்கு ஆதராவான நிலைப்பாடு எடுக்க இன்று ஆயுதங்களை விற்க அடுத்த இடம் தேடி அலைகிறது அமெரிக்கா.
அதற்கு வகையாக போய் அதன் ஆயுதச் சந்தைக்குள் சிக்கிக் கொண்டவர்கள்தான் பாகிஸ்தான்,இந்தியா என்னும் இந்த இரண்டு ஆசிய அடிமைகளும்.இரண்டுமே அமெரிக்காவின் திறந்த வெளிச்சந்தைகள் இருவருமே சொல்படி கேட்டு நடக்கும் அடிமைகள் என்னும் போது இரண்டு அடிமைகளை மோத விடும் பழைய கிளாடியேட்டர் பாணி போரை ஆசியாவில் நடத்த விரும்புகிறது அமெரிக்கா.பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தால் ஆயுதமும் விற்கலாம். கோக்,பெப்சி உட்பட குளிர்பானமும் விற்கலாம் ஆல் இன் ஆல் அமெரிக்காதான்…இஸ்லாமாபாத்தின் மீது வீசப்படுகிற குண்டுகளையும் மும்பை மீது வீசப்படுகிற குண்டுகளையும் பி.பி.சியோ சி.என்.என் தொலைக்காட்சியோ நேரடியாக நமக்கு சுட சுடத் தரும்.கூலாக கோக் அருந்தியபடி பார்க்கலாம்.
ஆயுத,ஊடக, தொழில் ஒரு பக்கம் இரண்டு பக்கமும் இடிகிற கட்டிடங்களை மீண்டும் கட்டுகிற கான்டிராக்ட் ஒரு பக்கம் என சமாதான புறக்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.அதனால்தான் பாகிஸ்தானோடு மோது என்று சண்டையைத் தூண்டி அசிங்கமான மாமா வேலை பார்க்கிறார் இந்த ஓபாமா.
ஒரு எஜமானனின் இரண்டு அடிமை அடியாட்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டால்….துவங்கிய சண்டையை அமெரிக்கா அவளவு சீக்கிரம் தீர்க்க விடாது. ஏனென்றால் செலவில்லாத போர் இல்லையா? இரண்டு பக்கமும் ஆயுதங்கள் மட்டும் சப்ளை செய்தால் போதும். ஒரு வேளை மும்பை தாக்குதல்களைக் காரணம் காட்டி பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என்றால் அது வெறுமனே இந்தியா பாகிஸ்தான் போராக மட்டுமே இருக்காது என்பது என் கருத்து, ஏனென்றால் ஆசியாவின் அமெரிக்க அடியாளாக இன்று உலகம் முழுக்க அறியப்பட்டது இந்தியா மட்டும்தான். அமெரிக்கா மீது ஆசிய நாடுகளில் சில எவளவு கடுப்போடு இருக்கிறதோ அதே கடுப்புகள் இந்தியா மீதும் இருக்கிறது. அப்படி இந்தியா மீது வேறு எந்த நாடும் கடுப்பைக் காட்டும் என்றால் உதவ அமெரிக்கா ஓடி வராது. பவுடர்பாலும், கோது டப்பாவும்தான் அனுப்பித்தரும்.சோமாலியாவிலும்,உகாண்டாவிலும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.
சரி கிடக்கட்டும்…
மும்பை தாக்குதல்களுக்காக சில நாற்காலிகளை மாற்றி இருக்கிறது காங்கிரஸ் அரசு. உண்மையில் சிவராக்பாட்டீல் அமர்ந்த நாற்காலியும் பா.சிதம்ப்ரம் அமரும் நாற்காளும் மட்டுமா?இந்தத் தாக்குதலுக்கு காரணம்.அப்படியென்றால் வெளியுறவுக் கொள்கை என்ற ஒன்றை இந்தியா வைத்திருக்கிறதே அது? ஒரு வேளை இப்படியும் இருக்கலாம் இல்லையா?இந்தியாவுக்கு ஏது வெளியுறவுக் கொள்கை வெள்ளை மாளிகையின் கொல்லைப் புறத்துக்கு அப்படி எதுவும் தேவையா என்ன?