Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒன்றிய அரசு என்பதை ஆங்கிலத்தில் சொல்லி பதவியேற்றுக் கொண்ட பாஜக் தலைவர் முருகன்!

இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.
இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் 43 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதில் கட்சி தாவி பாஜகவுக்கு வந்தவர்கள்.பாஜகவுக்கு உதவி அரசு உயர்பதவி ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகனுக்கு தாழ்த்தப்பட்டோர் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் பதவிக்கு வந்த பின்னரே பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வென்றுள்ளதால் அவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பதவியேற்றுக் கொண்ட அவர் ஒன்றிய அரசு என்பதன் ஆங்கில வார்த்தையான UNION GOVERMENT என்று ஆங்கிலத்தில் சொல்லி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் திமுக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவர் ஒன்றிய அரசு என பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்.


நாராயண் டாடு ராணே
சர்பானந்த சோனவால்
டாக்டர் வீரேந்தர் குமார்
ஜோதிர்ஆதித்ய சிந்தியா
ராம்சந்திர பிரசாத் சிங்
அஷ்வினி வைஷ்ணவ்
பஷுபதி குமார் பராஸ்
கிரண் ரிஜிஜு
ராஜ் குமார் சிங்
ஹர்தீப் சிங் பூரி
மன்சூக் மாண்டவியா
பூபேந்தர் யாதவ்
பர்ஷோத்தம் ரூபாலா
ஜி. கிஷண் ரெட்டி
அனுராக் சிங் தாகுர்
பங்கஜ் செளத்ரி
அனுப்ரியா சிங் படேல்
டாக்டர் சத்ய பால் சிங் பாகெல்
ராஜீவ் சந்திரசேகர்
ஷோபா கரண்ட்லஜே
பானு பிரதாப் சிங் வெர்மா
தர்ஷண விக்ரம் ஜார்தோஷ்
மீனாக்ஷி லேகி
அன்னபூர்னா தேவி
ஏ. நாராயணசாமி
கெளஷல் கிஷோர்
அஜய் பட்
பி.எல். வெர்மா
அஜய் குமார்
செளஹான் தேவுசின்ஹ்
பாக்வந்த் குபா
கபில் மோரேஷ்வர் பாட்டீல்
பிரதிமா பூமிக்
டாக்டர் சுபாஸ் சர்கார்
பகவத் கிஷண் ராவ் கரட்
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
டாக்டர் பாரதி பிரவீண் பவார்
பிஷேஸ்வர் துடு
ஷாந்தனு துடு
டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்
ஜான் பார்லா
எல். முருகன்
நிஷித் பிராமனிக்
ஆகியோர் மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள்.

Exit mobile version