Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

’ஒன்றியம்’ ஸ்டாலின் விளக்கம்!

ஒன்றிய அரசு என்ற சொல் நீண்ட காலமாக தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. Union Government என்ற சொல் இந்திய அரசை அதிகாரபூர்வமாக அழைக்கும் சொல் ஆகும்.அதை தமிழில் ஒன்றிய அரசு என்றுதான் அழைப்பார்கள். இந்நிலையில் இன்று சட்டமன்றம் கூடிய போது பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஒன்றிய அரசு என ஏன் பாரத நாட்டின் அரசை கூறுகின்றீர்கள். அப்படி அழைக்காதீர்கள் என்று சொன்னார். இதனையடுத்து அவரது கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,

“சட்டத்தில் இல்லாத வார்த்தைகள் எதனையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. மாநிலங்கள் ஒன்று சேர்ந்த அரசைத்தான்  ஒன்றிய அரசு என்கிறோம்.  சிலர் பேரறிஞர் அண்ணா சொல்லாத ஒன்றை தலைவர் கலைஞர் சொல்லாத ஒன்றை நாங்கள் சொல்லி வருவதாக விமர்சனம் செய்து வருகிறார்கள். திராவிட முன்னேற்றக்கழகத்தின் 1957-ல் தேர்தல் அறிக்கையிலேயே இந்திய யூனியன் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறோம். 1963 ஜனவரி 25-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன?அரசியல் இறையாண்மை மக்களுக்கு உள்ளது.சட்டம் சார்ந்த இறையாண்மை மாநிலங்களுக்கு உள்ளது. சமஷ்டி என்ற வார்த்தையை மாபொசி பயன்படுத்தினார். வெளியேறுக அதிகாரக் குவிப்பு வருக உண்மையான கூட்டாட்சி என்றார் ராஜாஜி. எனவே ஒன்றியம் என்ற சொல்லைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. எனவே அந்த வார்த்தையை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கிறோம். இப்போதும் பயன்படுத்துவோம்.வருங்காலத்திலும் பயன்படுத்துவோம்.பயன்படுத்திக் கொண்டே இருப்போம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Exit mobile version