Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“ஒன்றாக நிற்போம்”-11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் கடிதம்!

இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்யாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸ்ஸா, பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களின் முதல்வருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதம் இந்தியா எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழலில் மிக முக்கியத்தும் உள்ளதாக கருதப்படுகிறது.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க மாநிலங்கள் ஒன்றாக இணைய வேண்டும். ஒன்றாக நிற்க வேண்டும் எனக் கோரியுள்ளார். தடுப்பூசியை மத்திய அரசு மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.தடுப்பூசியை கொள்முதல் செய்யும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அதை அதிக விலை வைத்து விற்பனை செய்து வருகிறது.தடுப்பூசி கொள்முதல் சுமை முழுவதுமாக அல்லது கணிசமாக மாநிலங்களின் மீது கூட விழுந்தால், அவர்களின் நிதி நிலைமை கடுமையான நெருக்கடியில் இருக்கும். மாநிலங்களின் நிதி வலிமை என்பது ஒரு ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்புக்கு இன்றியமையாத அங்கமாகும். மாநிலங்களின் நிதியில் சிக்கல் ஏற்பட்டால் கூட்டாட்சியும் பலவீனம் அடையும். நம்மை போன்ற ஜனநாயக அரசியலுக்கு இது உகந்ததாக இருக்காது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கும்” என தனது கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version