Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொலை!

அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லடன் கொல்லப்பட்டுள்ளார்..

அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான அ‌ல் க‌ய்தா தலைவ‌ர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் தேடுதல் கு‌ற்றவா‌ளிக‌‌ள் பட்டியலில் முதல் இடத்தில் இரு‌ந்து வ‌ந்தா‌ர்.

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவக் கற்கை நிலையம் ஒன்றிலிருந்து 100 மீட்டர் தூரத்திலுள்ள இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றில் அமரிக்கத் துருப்புக்கள் ஹெலிகொப்டர் தாக்குதல்களை நடத்திய வேளையில் இவர் கொலைசெய்யபட்டார்.

அமரிக்கத் துருப்புக்களின் பேச்சாளர் ஒருவர் கருத்துப்படி பின்லாடனின் மகனும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
வலிமை மிக்க அமரிக்கத் துருப்புக்கள் பின்லாடனைச் சுற்றிவளைத்துக் கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் கொலைசெய்தமை குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

Exit mobile version