Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நாவின் கூலியாள் நவி பிள்ளையின் சுடலை ஞானம்

navipillaiஉலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.
சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த காலத்தில் மட்டுமல்ல உக்ரேயினில் நாசிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வேளையிலும் நவனீதம்பிள்ளை இரு தரப்பிலும் போர்க்குற்றங்கள் நடைபெறுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தை உமிழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரிக்கான படுகொலைகள் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் பிறந்த வளர்ந்தவரான நவநீதம் பிள்ளை அப்படுகொலைகள் தொடர்பாக இதுவரை மூச்சுவிட்டது கூடக் கிடையாது.

தாம் பெறும் ஊதியத்திற்காக ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழலாகச் செயற்படும் நவி பிள்ளை போன்ற கூலிகள் தம்மைப் புனிதப்படுத்த இறுதியில் கூறுகின்ற விமர்சனங்கள் கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பித்துவிடாது.

Exit mobile version