இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐ.நா பொதுச் செயலாளர் நாளை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாட்டின் அரச பிரதிநிதிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
ஐ.நாவின் பொதுச்செயலாளர் பதவியேற்றதிலிருந்து பான் கீ மூன் மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இம்முறை பான் கீமூனின் இந்திய விஜயத்தின் போது, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர அங்கத்துவம் பெறுவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
வன்னிப் படுகொலைகளின் போது ஐக்கிய நாடுகள்நிறுவனமும் பன் கீ மூனும் இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை. அமரிக்க அரசின் முகவர் நிறுவனம் போன்று செயற்படும் ஐ.நா வின் மத்தியகிழக்கு செயற்பாடுகள் உலகை முகாம்களாகப் பிளவுபடுத்தி வல்லரசுகளின்நலன்களைத் தக்கவைப்பதற்கு உதவிபுரிகின்றன.
குறிப்பாக ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான சிந்த்தனைப் போக்கை உருவாக்குவதில் ஐ.நாவினதும் பன் கீ மூனதும் பங்களிப்பு ஜனநாயக முற்போக்கு சக்திகளின் எதிர்[ப்பிற்கு உள்ளானது.
இதேவேளை ஏப்ரல் 27ம் திகதி, பான் கீ மூனுக்கு ஜமையா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. பின்னர் மும்பை செல்லும் அவர் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவானை சந்திக்கவுள்ளார். பின்னர் அங்கு மகளீர் மற்றும் சிறுவர் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.