இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியின் இறுதியில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க இருக்கிறது.
விமான நிலையங்கள் அதானிக்கும் விமானங்கள் டாடாவுக்கும் செல்கின்றன. டாடா நிறுவனத்தை டாடா வாங்க விருப்பம் தெரிவித்து ஏழு விதமான விலைகளை நிர்ணயித்து அரசிடம் வழங்கியிருந்தது.
டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதற்காக டாடா குழுமம் அளித்த ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா, டாடா குழுமத்துக்கு கைமாறப்பட்டால், இந்த விமான நிறுவனத்தை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைவசப்படுத்தும் வாய்ப்பு அதற்கு கிடைக்கும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1932-ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் டாடா ஏர்லைன்ஸ் துவங்கபப்ட்டது. அந்த நிறுவனம்தான் சுதந்திரத்திற்குப் பின்னர் அந்த நிறுவனம்தான் ஏர் இந்தியா ஆனது.
நேருவின் முயற்சியால் அரசுடமை ஆன ஏர் இந்தியாவை டாடாவுக்கே விற்கிறது மோடி அரசு. ஏர் இந்தியா மேலும் மேலும் நட்டமடைய பிரதமர் அலுவகம் வைத்த கடன்களும் ஒரு காரணம் எனறு கூறப்படுகிறது.
ஏனெனில் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932-ம் ஆண்டு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தைதான் மத்திய அரசு கடந்த 1953-ம் ஆண்டு தேசிய மயமாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.