Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏர்க்காடு இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு கருணா நிதி கேட்டதை கட்சிகள் நிராகரித்தன

ஏர்க்காடு இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு கருணா நிதி கேட்டதை கட்சிகள் நிராகரித்தன. தா.பாண்டியன் இந்துத்துவத்தை ஆதரரிக்கும் கட்சியான ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.முக இற்கு வோட்டளிக்க கோரியுள்ளார்.
கட்சித் தலைவர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் விவரம்:டிசம்பர்,4ல் நடக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க., தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானது என, நினைத்து இந்த முடிவு எடுத்துள்ளோம்.தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்சியின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத்தேர்தலில், கட்சி வேட்பாளருக்கு தங்கள் கட்சியின் ஆதரவை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்மாநில செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், பா.ம.க., நிறுவனர ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கருணாநிதி எழுதிய கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News FM

Exit mobile version