Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எப்படி நடந்தது குன்னூர் விமான விபத்து?

இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருப்பது இந்தியா முழுக்க பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த விபத்தில் பலியாகியிருப்பது இந்தியாவின் முப்படை தலைமை தளபதியும் மிக முக்கிய தளபதிகளும்  இதனால் இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து mil mi 17 ரக விமானத்தில் கிளம்பிய நிலையில் சற்று நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பல விதமான MIL MI 17 வகை ராணுவங்கள் பயன்படுத்தப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தால் 77 காலப்பகுதியில் இந்திய ராணுவத்தில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் 2013 ஆண்டு அளவில்  rosoboronexport என்ற நிறுவனத்துடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் அடிபப்டையில் 36 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியது.

இதில் ஒன்றுதான் இப்போது விபத்தில் சிக்கியிருக்கிறது என நினைக்கிறேன். வெலிங்டன் ராணுவப் பள்ளியில் மதியம் 2-45 மணிக்கு விபின் ராவத் உரையாற்ற வந்திருக்கிறார். அந்த விமானம் வெலிங்டன் இறங்கு தளத்தை நோக்கி இறங்கும் போதே விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் விமானம் தாழ்வாகப் பறந்திருக்கிறது. ஆனால், மேகமூட்டம், மூடுபனி காரணமாக கணிப்பு பொய்த்து மிகத் தாழ்வாகப் பறந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருந்திருக்கலாம்.

மேலும் இந்த விபத்து இன்னும் நூறடி தள்ளி நடந்திருந்தால் விமானம் காட்டுப்பகுதியில் விழுவதற்கு பதிலாக குடியிருப்புகளுக்கு மத்தியில் விழுந்திருக்கும். எனவே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எது எப்படி என்றாலும் இந்த வகை விமானங்கள் 70-பதுகளுக்கு பின்பு இருந்தே இந்திய ராணுவ பயன்பாட்டில் உள்ளது. அடிக்கடி விபத்திற்கு உள்ளாகும் விமானமாகவும் இது உள்ளது கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஆறு முறை விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

விமானப்பயணத்தின் முன்னர் வானிலை அறிக்கையில் எச்சரித்ததாகௌவ்ம் கூறப்படுகிறது. அதையும் மீறி விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

இப்படி ஒரு விமானத்தில் காட்டுப்பகுதிக்குள் கடும் மேக மூட்டம் நிரம்பும் காலத்தில்  முப்படைத் தளபதி ஏன் செல்ல வேண்டும் அதுவும் இந்த விமானத்தில்?

Exit mobile version