Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்க்கட்சிகள் ஆலோசனை திமுக புறக்கணிப்பு?

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார்.  தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர் சில சந்திப்புகளை நடத்திய பின்னர் நாடு முழுக்க உள்ள பாஜகவுக்கு எதிரான 15 கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

 

2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் போது வலிமையான ஒரு எதிர்ப்பணியை உருவாக்குவதற்கான பணிகளை இப்போதே  முடுக்கி விட வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். அதற்கான பணிகளை முடுக்கி விட்ட அவர் திரிணாமூல் காங்கிரஸ்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக உட்பட சில கட்சிகளும் மேலும்  நீதிபதி ஏபி சிங், ஜாவேத் அக்தர், கேடிஎஸ் துள்சி, கரன் தாப்பர், முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா பங்கேற்பார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்கூட்டத்தில் திமுக சார்பில் எவரும் பங்கேற்கவில்லை.சரத்பவார் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் திமுக சார்பில் எவரும் பங்கேற்காதது  ஏன் என்ற கேள்வி ஊடகவியலாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

திமுக இதுவரை காங்கிரஸ் கூட்டணியில்தான் இருக்கிறது. திடீரென சரத்பவாருடன் இணைந்து மூன்றாவது என்பது போன்று செயல்பட்டால் அது கூட்டணிக்குள் தேவையற்ற சச்சரவுகளை உருவாக்கும் என்பதால் திமுக இக்கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.ஆனால் திமுக மட்டுமல்ல காங்கிரஸ், ஜனதா தளம், சமாஜ்வாதி உட்பட பல கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறப்படுகிறது.

Exit mobile version