Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எடப்பாடி பழனிசாமி பிடி இறுகிறது!

தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தைச் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களை தமிழக அரசு பழிவாங்குவதாக முறையிட்டு வந்திருக்கிறார்கள்.


ஜெயலலிதா தங்கும் கொடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அடுத்தடுத்து நடந்த கொள்ளையும், காணாமல் போன சில ஆவணங்களும், அந்த கொள்ளை வழக்கோடு தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து விபத்துகளிலும் மர்மமான முறையில் இறந்து போனதும் அப்போது அதிர்வலைகளை உருவாக்கின.


ஆனால்,இப்போது ஆட்சி மாறிய பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சூடு பிடித்திருக்கிறது. அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறியிருப்பதால் அதிமுக தலைமை கலக்கம் அடைந்துள்ளது. காரணம் கொலை வழக்கில் கைதானால் அரசியல் வாழ்க்கையே முடிந்து போகும்.


அதனால் இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுமாறு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அணுகியிருக்கிறது. பாஜகவும் இதை வைத்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பேரம் பேசும் என்றே தெரிகிறது. ஆனால் கட்டுமானப் பணிகளில் நடந்துள்ள ஊழல் விஸ்வரூபம் எடுத்தால் அதில் பன்னீர்செல்வம் தப்புவதே கடினம் என்கிறார்கள். காரணம் பி டி எஸ் கட்டுமான நிறுவனம் என்ற ஒரே நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி அளவில் ஒப்பந்தம் கொடுத்ததும். அந்த நி|றுவனம் கட்டிய புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு தரமற்றதாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதே நிறுவனம் கட்டிய தென்பெண்ணை தடுப்பணை கட்டிய நான்கே மாதத்தில் இடிந்து விழுந்தும் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி ஊழல், முறைகேடு,கொடநாடு என பல வழக்குகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களைச் சுற்றி வரும் நிலையில் இவர்கள் பாஜகவிடம் ஒட்டு மொத்தமாக சரணடையும் சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version