பாஜக தலைவரான எச்.ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். தனது தோல்விக்கு கட்சியினரே காரணம் என்றார்.இதனால் கடுப்பான நிர்வாகிகள் எச்.ராஜா கட்சி கொடுத்த பணத்தை முறையாக செலவு செய்யவில்லை என்றும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புது வீடு கட்டி வருவதாகவும் தெரிவித்தனர். எச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைக்க தோல்விக்கு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகக் கூறி இருந்தார்.எச்.ராஜா மீது பாஜக நகர நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.
புகார் கூறியவர்கள் தொடர்பாக விசாரணை நடந்த நிலையில் பாஜக காரைக்குடி மண்டல் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகியோர் பாஜக கட்சிப் பொறுப்புகள் மட்டுமில்லாமல், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இது பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.