இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் யாழ்ப்பாண முஸ்லிம்களும் கொண்டனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசல் உடைப்பின் பின்னணி சந்தேகத்திற்குரியது என அங்கிருந்து அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை மட்டகளப்பிலும் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலை மகிந்த ராஜபக்ச அரசின் உற்பத்தியான பொது பல சேனாவே நடத்திவருகிறது. நாடுதழுவிய இனச்சுத்திகரிப்புப் போன்று நடைபெறும் தாக்குதலில் அரச ஆதரவு தமிழ்ப் பேசும் உளவாளிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகங்கள் மிக நீண்டகாலமாகவே நிலவிவருகிறது.
இஸ்லாமியத் தமிழர்கள் மீதான இனசுத்திகரிப்பை ஆரம்பித்தல், அதற்கு எதிரான எதிர்புப் போராட்டங்கள அரச ஆதரவாளர்களைப்பயன்படுத்தி உள்வாங்குதல், இஸ்லாமியத் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்கும் இடையே பிளவுகளை உருவாக்குதல் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது.
இஸ்லாமியத் தமிழர்கள் தமது சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அடிப்படை ஜனநாயகப் பொறிமுறைகளைப் பயன்படுத்தி கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு திட்டமிடுவதன் ஊடகவே அழிவுகளை மட்டுப்படுத்தலாம். எதிராகாலத்தில் ஏனைய தேசிய இனங்களுடனனான நல்லிணக்கம் கூட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஊடாகவே எட்டப்பட முடியும்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் இஸ்லாமியத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட போது அதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்பட்டதைக் காணலாம்.
வடகிழகுத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை இவ்வாறான முரண்பாடுகள் ஊடாகவே அழித்த வரலாற்றை மக்கள் விரோதிகள் மீண்டும் முடுக்கிவிட்டுள்ளனர். இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களும், சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இது குறித்து எச்சரிக்கையடைய வேண்டும்.