இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அன்றாடம் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டு வருகிறது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். நாடு மிகப்பெரிய இக்கட்டான சூழலை சந்திக்கும் நிலையிலும் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளை அச்சுறுத்தவும், அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளாது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் அவர் சுட்டிக் காட்டும் விஷயங்கள் நிலமையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. அவர் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்’’ (குறள்: 442)
நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழக்கிறார்கள என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால் ஒரு மணி நேரத்தில் சுமார் 165 பேர் மரணமடைகிறார்கள். 4 நிமிடத்தில் 11 பேர்! பெருந்துயரம். எங்கும் மரணத்தின் ஓலம். இந்த அவலத்திற்கு இந்த நாட்டை ஆள்பவர்களின் கண்கள் கண்ணீர் மழை பொழிய வேண்டுமே? அவர்கள் கண் கலங்க மாட்டார்கள். அவர்கள் இதயத்தில் ஈரமில்லாத கல் நெஞ்சக்காரர்கள் அல்லவா?