Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உ.பி விவசாயிகள் படுகொலை –ஸ்டாலின் கண்டனம் சட்டங்களை திரும்பப்பெற கோரிக்கை!

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனங்களை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய இணை அமைச்சரின் மகனால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுக்க கொந்தளிப்பை உருவாக்கியுள்ள நிலையில், நாடு தழுவிய அளவில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். சுமார் 300 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒன்றிய அரசு அலட்சியமாக நடந்து கொண்டதன் விளைவுதான் உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது தொடர்பாக நிலமையை ஆராயச் சென்ற ப்ரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அகிலேஷ்  யாதவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். என்று கண்டித்துள்ள ஸ்டாலின். மூன்று வேளாண் சட்டங்களையும் கைவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Exit mobile version