Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-மக்களுக்கான திரைப்படம் (முழுமையான காணொளி)

tendaysஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப்படம் மக்கள் சார்ந்த உலகத் திரைப்படங்களில் ஒன்று. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பண வெறிக்காக ‘கலையாக்கப்பட்ட’ திரப்படம் அல்ல ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’. கத்தி, அலவாங்கு, கோடரி, இரத்தம் போன்ற திரைப்படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம் அல்ல இது. இளைஞர்களையும், சமூகத்தின் பெரும் பகுதியையும் மூளைச்சலவை செய்யும் பாலியல் வக்கிரங்களின் தொகுப்பு இன்றைய சினிமா. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த பாலியல் தொழிலாளி சன்னி லியோனை இளைஞர்கள் கனவுக்கன்னியாக்கும் வரை இந்திய சினிமா அருவருப்பான சமூகப் பொதுப் புத்தியை உருவாக்கியுள்ளது.

இரத்தம் தெறிக்கும் வன்முறையும், இந்துத்துவ வெறியும், சாதீய மேலாதிக்கமும் பெரும்பாலான தமிழ் நாட்டு சினிமாக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் இச் சீரழிவுகளை கலாச்சார அழிப்பாகவே கருதவேண்டும். இவை அனைத்துக்கும் மத்தியில் மொழியே அற்ற காவியமாக உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற திரைப்படத்தைக் காணலாம். உலகம் முழுவதும் அதிக பணத்தைக் கொட்டி அழிப்பதற்கு முயற்சித்த ஒரு போராட்டம் எப்படி வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்ப்பட்டது என்பதை இங்கு காணலாம்.
சினிமா என்ற போதை மருந்தைப் பயன்படுத்தி மயக்கத்தில் தள்ளாடி நடக்கும் ஒரு சமூகத்தை இந்திய சினிமா தனது நாட்டில் உருவாக்கியுள்ளது. அதிகாரவர்க்கம் கலைகள் ஊடாக சமூகத்தைப் போதையில் வைத்திருப்பதில் வெற்றிகண்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டிருந்தது. எண்பதுகளில் போராட்டம் தொடர்பான மாற்றுக் கலைகளும் காவியங்களும் எழுச்சி பெற்றன. நூற்றுக்கணக்கான படைப்புக்கள் மண்ணின் வாசனையோடு மக்களின் மகிழ்ச்சியிலுருந்தும் துயரங்களிலிருந்தும் வெளிவந்தன. பல்வேறு தெரு நாடகங்கள் ஒவ்வொரு சந்து பொந்துக்களிலெல்லாம் அரங்கேறின.

இவை அனைத்தும் மெதுவாக அழிக்கப்பட்டு இன்று கலைகளின் மொத்த வியாபாரிகளாக பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மாறியுள்ளன.

ஈழத் தமிழர்களைப் போதையூட்டிய சமூகமாக மாற்றிச் சிதைக்க இன்றைய சினிமாக்கள் எமது கதவுகளைத் தட்டி அனுமதி கேட்கின்றன.

அமெரிக்கரான ஜோன் ரீட் சோவியத் புரட்சியின் போது தான் நேரில் கண்டவற்றால் அதிசயித்துப் போகிறா. இன்று சர்வாதிகார நாடாக மாறிவிட்ட ரஷ்யாவில் மக்களுக்கான ஜனநாயகம் வெற்றிபெற்ற இறுதிப் பத்து நாட்கள் பற்றிய இந்தத் திரைப்படத்தை எழுதியவர் ஜோன் ரீட்.செர்ஜி ஐஸன்ஸ்டின் என்ற இயக்குனர் படைத்தை நெறிப்படுத்தியுள்ளார்.

போராட்டத்திலும், மக்கள் மீதும், கலை மீதும் அக்கறை கொண்ட அனைவரும் பார்க்க வேண்டிய திரைக் காவியம் இது.

 

Exit mobile version