உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 5000 கோடிக்கு மேல் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களின் நாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் வழக்கம் போல அமெரிக்கா வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 359 ஆகும்.
2வது இடத்தில் சீனா உள்ளது. அங்கு 130 பேர் மெகா கோடீஸ்வரர்கள். கடந்த ஆண்டு சீனாவில் 101 பேர்தான் மெகா கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது கிடுகிடுவென இந்த பட்டியல் வளர்ந்துள்ளது.
ரஷ்யா மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 32 பேர் ரூ. 5000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
இந்தியாவும் இப்போது மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் 24 மெகா கோடீஸ்வரர்கள் உள்ளனர்.