இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான். கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகப்பதட்டம், சாதிக்கொடுமைகள் நிறைந்த மாநிலமும் இதுதான். நிலம் மிகக் குறைவானர்களிடம் குவிந்து கிடக்கும் பெரும்பாலானோரிடம் நிலம் கிடையாது கல்வி பற்றிய விழிப்புணர்வோ, சுகாதாரக்கட்டமைப்போ உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாநிலமாக இதுவே இருந்து வருகிறது.
இந்திய அரசியலை புரட்டிப் போட்டு மதவாத இருண்ட காலத்திற்குள் இந்தியாவைத் தள்ளியதும் உபிதான். அங்குள்ள அயோத்தியில் உள்ள ராமர்கோவிலை இடித்ததன் மூலமே இந்தியா இன்று வரை இந்து-முஸ்லீம் என பிளவுபட்டு இருக்கிறது.
காங்கிரஸ் இங்கு ஆட்சியை இழந்து நீண்ட காலங்கள் ஆகி விட்ட நிலையில் பாஜக தன் இந்துத்துவ செல்வாக்கால் இந்தமண்ணில் ஆளும் கட்சியாக இருக்கிறது, மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி,அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, கட்சிகள் தனித்து ஆட்சியமைத்த மாநிலம்தான் என்ற போதும்.பாஜகவிடம் இருந்து யார் ஆட்சியைக் கைப்பற்ற போகிறார்கள் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்குள்ளேயும் கடும் போட்டி நிலவுகிறது.
மாயவாதி, காங்கிராஸ், அகிலேஷ் யாதவ்,பாஜக என அனைத்துக் கட்சிகளுமே இந்த தேர்தலின் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிகிறது. இதில் பாஜக சாதித் தலைவர்களின் ஆதரவோடும்,ராமரின் துணையோடும் வென்று விடலாம் என நினைக்கிறது. காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரியங்கா காந்தி தலைமையில் தீவிரப்பணி செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி தொகுதியே அவர்களின்கைகளை விட்டுச் சென்று விட்ட நிலையில் ப்ரியங்கா காந்தியை உத்தரபிரதேச தலைவராக்கு முழு நேரமும் கட்சியை வளர்க்க பணி செய்தது காங்கிரஸ்.
அவரும் தலித் மக்கள் மீதான வன்முறைகள், விவசாயிகள் பிரச்சனை என கடந்த காலங்களை விட அதிகமாகவே உழைத்திருக்கிறார். லக்னோவில் தேர்தல் அலுவலகம் திறந்து விட்ட பிரியங்கா காந்தி அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இருந்துபெரிதாக எந்த தலைவரும் பாஜக பக்கம் சென்று விடவில்லை .காரணம் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட இல்லை. இழந்து மொத்த செல்வாக்கையும் எப்படியாவது மீட்க வேண்டும் என்பதே பிரியங்கா முன்னால் உள்ள சவால்.
அதை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.