Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உத்தர் பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்

rapeஉத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க பெண் நீதிபதி கூச்சலிட்டபோது, இருவரும் சேர்ந்து அவரது வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு இந்தியக் காவல்துறையின் அனுசரணையுடன் நடைபெற்றமை தெரிந்ததே.

நுகர்வுக் கலாச்சார வெறியும், ஆணாதிக்கமும், ஆதிக்கசாதி மனோபாவமும் பெண்களை விலங்குகள் போல நுகரக்கற்றுக்கொண்ட லும்பன்களை உருவாக்கியுள்ளது.

நீதிபதியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மறுநாள் காலையில் வீட்டுப் பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த பொலிசார், படுக்கை அறையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம், பொலிஸ் உயர் அதிகாரி நிதின் திவாரி ஐ.ஏ.என்.எஸ். கூறுகையில், பெண் நீதிபதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் சிறிது உடல்நலம் தேறியதும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version