இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ராகுல்காந்திக்கு நெருக்கமான தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் உபி மாநில முக்கிய தலைவரும் ஆவார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தல்தான் என்றாலும் இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் உத்தரபிரதேச தேர்தல் மிக மிக முக்கியப் பங்காற்றும். ஒன்றிலோ அகிலேஷ் யாதவ் வெல்ல வேண்டும் அல்லது காங்கிரஸ் வெல்ல வேண்டும். மீண்டும் பாஜக வென்றால் நிச்சயம் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆகவே வாய்ப்பு உள்ளது.
இது போன்ற சூழலில் ராகுல்காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும், உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்திருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. முதல் ஐந்து ஆண்டுகள் கூட ஓகே ஆளும் கட்சி தன் பலத்தை பயன்படுத்தி கட்சிகளை உடைக்கும் எனலாம். ஆனால் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள் என்றால் கட்சிக்கு உரிய தலைமையை தெரிவு செய்து இவைகளை சரி செய்ய வேண்டும். அல்லது எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் வழி விட வேண்டும். இது ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மீதே மக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கும். ஒரு கட்சி பலவீனமாக இருப்பது வேறு அதன் தலைவர்களே கட்சி தலைமை மீது நம்பிக்கையை இழப்பது வேறு.